For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

புதிய போப் தேர்வுக்கு கருணாநிதி மிகுந்த மகிழ்ச்சி

Google Oneindia Tamil News

Karunanidhi hails election of Argentine cardinal as pope
சென்னை: புதிய போப்பாண்டவராக எளிமையான மனிதராக அறியப்படும் அர்ஜென்டினா ஆர்ச்பிஷப் ஜார்ஜ் பெர்கோக்லியோ தேர்வு செய்யப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சி தருகிறது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

உலகெங்கிலும் வாழும் கத்தோலிக்கக் கிறிஸ்தவர்களின் தலைவராக அர்ஜென்டினா நாட்டை சேர்ந்த, ஜார்ஜ் மரியோ பெர்கோக்லியோ தேர்வு செய்யப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது.

புதிதாகத் தேர்வு செய்யப்பட்டிருக்கும் போப், முதலாவதாகத் தேர்வு செய்யப்படும் தென் அமெரிக்கர் என்பதும், அவர் நீண்ட நெடுங்காலமாக மிக எளிய வாழ்க்கை வாழ்ந்து வருகிறார் என்பதும், தனக்கெனச் சொந்தமாக எந்த வாகனத்தையும் பயன்படுத்தாமல் பொது போக்குவரத்து வாகனத்தையே பயன்படுத்தியும் தனக்குத் தேவையான உணவைத்தானே சமைத்து உண்டு வருகிறார் என்பதும், அவரது தந்தையார் ஒரு ரயில்வே தொழிலாளி என்பதும் நமக்கெல்லாம் பெருமை அளிக்கிறது.

கத்தோலிக்கக் கிறிஸ்தவர்கள் இந்த நேரத்தில் அடையும் மகிழ்ச்சியில் நானும் பங்கேற்கிறேன் என்று கூறியுள்ளார் கருணாநிதி.

English summary
DMK president M Karunanidhi today welcomed the election of Argentine Cardinal Jorge Bergoglio as the new Pope, hailing him for his simplicity.
 The election of the cardinal as Pope gives "immense joy," Karunanidhi said in a party statement.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X