For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

புது போப்பாண்டவர்.. நீங்க தெரிஞ்சுக்க வேண்டிய 5 விஷயங்கள்

Google Oneindia Tamil News

வாடிகன் சிட்டி: உலகம் முழுவது்ம் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் புதிய தலைவராக, புதிய போப்பாண்டவராக அர்ஜென்டினாவைச் சேர்ந்த கர்தினால் ஜார்ஜ் பெர்கோக்கிலா தேர்வாகியுள்ளார்.

அர்ஜென்டினாவின் பியூனஸ் அயர்ஸ் நகரிலிருந்து போப்பாண்டவராக உயர்ந்துள்ளார் ஜார்ஜ்.

லத்தீன் அமெரிக்கர் ஒருவர் போப்பாண்டவராக தேர்வு செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும். இனிமேல் இவர்தான் உலகம் முழுவதும் பரவி வாழும் கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவர் ஆவார்.

பெயருக்குப் பின் எண் வராது

பெயருக்குப் பின் எண் வராது

புதிய போப்பாண்டவர் தனது பெயராக பிரான்சிஸ் என்பதைத் தேர்வு செய்துள்ளார். இதுவரை இருந்த போப்புகளுக்குப் பின்னால் ஒரு எண் இருக்கும். அதாவது 2ம் போப் ஜான் பால், 16ம் பெனடிக்ட் என்று. ஆனால் தற்போது தேர்வாகியுள்ள ஜார்ஜ் தேர்வு செய்துள்ள பெயர் பிரான்சிஸ் என்பதாகும். இவர்தான் முதல் பிரான்சிஸ் என்பதால் இவரது பெயருக்குப் பின்னால் எண் எதுவும் இருக்காது. இப்படி எண் இல்லாமல் ஒரு போப் வருவது இதுவே முதல் முறையாகும்.

ஐரோப்பாவுக்கு வெளியிலிருந்து வந்த முதல் போப் அல்ல

ஐரோப்பாவுக்கு வெளியிலிருந்து வந்த முதல் போப் அல்ல

போப் முதலாம் பிரான்சிஸ் ஐரோப்பியர் அல்லாத முதல் போப் என்று கூறப்படுகிறது. இருப்பினும் அது உண்மையல்ல. 8ம் நூற்றாண்டில், ஒரு சிரிய நாட்டைச் சேர்ந்தவர் போப்பாக இருந்துள்ளார். அவரது பெயர் போப் 3ம் புனித கிரகெரி என்பதாகும். இவர் கி.பி. 731 முதல் 741 வரை போப்பாக இருந்தார்.

அதேபோல பெத்லேகம், ஜெருசலேம், லிபியா உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்களும் கூட இதற்கு முன்பு போப்பாக இருந்துள்ளனர்.

மக்களின் போப்

மக்களின் போப்

புதிய போப்பாக தேர்வு செய்யப்பட்டுள்ளவர் மக்களின் போப்பாக பார்க்கப்படுகிறார். காராணம், இவர் சாதாரண மக்கள் மீது அதிக ஈடுபாடு கொண்டவர் என்பதால். மிகவும் எளிமையானவர் இவர் என்று அனைவரும் சொல்கிறார்கள். குறிப்பாக அர்ஜென்டினாவில் இவரை அனைவரும் வெகுவாக புகழ்கின்றனர். நகரப் பேருந்தில் ஏறிதான் பல இடங்களுக்கும் இவர் போவார் என்று பியூனஸ் அயர்ஸ் மக்கள் நெகிழ்ச்சியுடன் கூறுகிறார்கள்.

ஆர்ச்பிஷப்பாக இருக்கும் இவர் பெரிய மாளிகையில் வசிக்காமல் மிகவும் சாதாரண வீட்டில்தான் வசித்து வருகிறாராம். இவரே சமைத்துக் கொள்வாராம்.

அபார்ஷனுக்கு எதிரானவர்

அபார்ஷனுக்கு எதிரானவர்

முந்தைய போப்புகளைப் போலவே இவரும் அபார்ஷன், ஓரினச் சேர்க்கைத் திருமணம் ஆகியவற்றுக்கு எதிரானவர்தான். அபார்ஷன் சட்டம் தொடர்பாக அர்ஜென்டினா அதிபருடன் மோதியவரும் கூட.

நிறைய சவால்கள்

நிறைய சவால்கள்

வாடிகன் சிட்டியில் முன்பு போல இப்போது நிலைமை இல்லை. அங்கு ஊழல்களும் முறைகேடுகளும் பெருகி விட்டதாக சமீப காலமாக செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. இந்த பின்னணியில் போப்பாண்டவராக தேர்வாகியுள்ளார் ஜார்ஜ்.

எப்படி வாடிகன் சிட்டியை அவர் சரி செய்யப் போகிறார் என்ற பெரு்ம் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

English summary
From the Vatican to Buenos Aires, Catholics worldwide rejoiced when Cardinal Jorge Bergoglio became the new pope. He's the first Jesuit and the first Latin American in modern times to lead the world's 1.2 billion Catholics. But in some ways, he's just a normal guy. Here are five things to know about Pope Francis.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X