For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சட்டமன்ற தேர்தலில் 3 டி பிரசாரம்: கின்னஸில் இடம் பிடித்தார் மோடி!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

காந்திநகர்: குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கடந்த சட்டமன்ற தேர்தலின் போது, 3 டி தொழில்நுட்பத்தில் மேற்கொண்ட தேர்தல் பிரசாரம் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.

வீடு வீடாக மக்களை சென்று சந்தித்து வாக்கு சேகரித்தது ஒரு காலம். இணைய தளம் மூலமும், சமூக வலைத்தளங்கள் மூலம் தேர்தல் பிரச்சாரம் செய்வது அதிகரித்து வருகிறது. இதை விட வித்யாசமாக ‘தி பெப்பர்ஸ் கோஸ்ட் இலூஷன்' என்ற தொழில்நுட்பத்தின் படி கடந்த சட்டமன்ற தேர்தலில் பிரச்சாரம் செய்தார் குஜராத் முதல்வர் மோடி.

Narendra Modi’s 3D show enters Guinness Book of World Records!

இந்த தேர்தல் பிரசாரத்தின் மூலம் ஒரே நேரத்தில் 53 இடங்களில் மோடியின் 55 நிமிட தேர்தல் பிரசாரம் ஒளிபரப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த பிரச்சாரம்தான் தற்போது சாதனையாக கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.

இது தொடர்பாக தனது டுவிட்டர் வலைதளத்தில் மோடி செய்தி வெளியிட்டுள்ள மோடி, "கடந்த 2012ம் ஆண்டு குஜராத் சட்டசபை தேர்தல் பிரசாரம் மறக்க முடியாதது என்றும், 3டி தொழில்நுட்பத்தில் நடத்தப்பட்ட இந்த பிரசாரம் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது'என்று தெரிவித்துள்ளார்.

English summary
The first-of-its-kind experiment in the run-up to the 2012 state Assembly polls in which Chief Minister Narendra Modi’s speech was broadcast simultaneously at 53 locations across 26 cities in Gujarat using 3-D hologram projection technology has earned a place in the Guinness Book of World Records.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X