For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஹியூகோ சாவேஸ் உடல் கராகஸ் ராணுவ அருங்காட்சியகத்தில் அடக்கம்... லட்சக்கணக்கானோர் கண்ணீர் அஞ்சலி

By Mayura Akilan
Google Oneindia Tamil News

கராகஸ்: புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மரணமடைந்த வெனிசுலா அதிபர் ஹியூகோ சாவேஸின் உடல், கராகஸில் உள்ள ராணுவ அருங்காட்சியகத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

14 ஆண்டு காலம் வெனிசுலா நாட்டை ஆட்சி செய்த அதிபர் ஹியூகோ சாவேஸ், புற்றுநோய் தாக்குதலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி கடந்த 5-ம் தேதி உயிரிழந்தார்.

இவரது மரணத்திற்கு உலகம் முழுவதிலும் உள்ள முக்கிய தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர். லட்சக்கணக்கானோர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். பொதுமக்கள் மற்றும் தலைவர்களின் அஞ்சலிக்காக சாவேஸின் உடல் மூலிகைகள் பூசப்பட்டு ஒரு வார காலம் வைக்கப்பட்டிருந்தது.

 Hugo Chavez
பின்னர் அரச மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் நடத்தப்பட்டு, சாவேஸின் உடல் கராகஸ் நகரின் தெருக்கள் வழியாக ராணுவ அருங்காட்சியகத்துக்கு கொண்டு வரப்பட்டது. வழிநெடுங்கிலும், ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் சாவேஸுக்கு இறுதி மரியாதை செலுத்தினர். சாவேஸ் இறுதி ஊர்வலம், உடல் அடக்கம் நிகழ்ச்சி தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

12 கிலோமீட்டர் தூரத்திற்கு இந்த இறுதி ஊர்வலம் நடைபெற்றது. இதில் சாவேஸின் குடும்பத்தினர், அவருக்கு நெருக்கமான அரசியல் தலைவர்கள், முக்கிய அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். லட்சக்கணக்கானோர் கண்ணீர் மல்க தங்கள் புரட்சித்தலைவனுக்கு விடை கொடுத்தனர்.

English summary
Late president Hugo Chavez was laid to rest at the headquarters of his failed 1992 coup attempt on Friday, a month before snap elections to pick his successor.Hundreds of thousands of Venezuelans had thronged the streets of Caracas to bid a final farewell to the man who ruled the oil-rich South American country for 14 years.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X