For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

’சிரிக்க சிரிக்க சிரிப்பு வந்துகிட்டே இருக்கு’ - தொடர்ந்து சிரித்துக் கொண்டே இருக்கும் சிறுவன்

Google Oneindia Tamil News

இங்கிலாந்து: அளவுக்கு மிஞ்சினால் எதுவுமே ஆபத்து தான். இதற்கு புன்னகையும் விதிவிலக்கல்ல. வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும் தான், ஆனால் சிரிப்பதே நோயாகிப் போன சிறுவனைப் பற்றி உங்களுக்கு தெரியுமா?

இங்கிலாந்து நாட்டில் வடக்கு வேல்ஸ் பகுதியில் வசித்து வரும் சிறுவனுக்கு தான் இந்த வினோத நோய். 11 வயதான ஜேம்ஸ் எடகார்ஸ் பிறந்த நாள் முதல் சிரித்த வண்ணமே உள்ளான். இவனால் பேச இயலாது. ஆனால் உரக்க சிரிக்க முடியும். புன்னகை பூத்த முகமாக வலம் வரும் இவன் தனது தேவைகள், உணர்வுகளை ஐபாட் மூலம் தெரிவிக்கிறான். இதுகுறித்து சிறுவனின் தாய் ராஷல் கூறும் போது, அவன் ஒரு மகிழ்ச்சியான பாசமுள்ள குழந்தையாக இருப்பது எங்களுக்கு சந்தோஷம் தான். ஆனால் ஆபத்தான விஷயங்களை உணரும் சக்தி அவனுக்கு இல்லை. எனவே அவனை நாங்கள் கண்காணிக்க வேண்டியுள்ளது என்கிறார் அவர். நரம்பியல் பிறவியிலேயே, சிலருக்கு இவ்வகை நோய் ஏற்படலாம் என கூறுகிறார்கள் டாக்டர்கள். நாடு முழுவதும் சுமார் ஆயிரம் பேர் இந்நோயினால் பாதிக்கப்பட்டு இருப்பதாக ஒரு புள்ளி விவரம் கூறுகிறது.

17 மாத குழந்தையாக இருந்தது முதல் இன்று வரை இவனுக்கு விசேச சிகிச்சையினை டாக்டர்கள் கொடுத்து வருகிறார்கள். இதற்கான செலவுகளை ஏற்று வரும் தொன்டு நிறுவனங்கள் விரைவில் உதவித் தொகையினை இரு மடங்காக உயர்த்த ஏற்பாடு செய்து வருகிறார்கலாம்.

English summary
A 11 years old boy in England, has a rare disease of nuero. James, had been affected by a rare nuero disorder, that he is laughing all the time, day and night. At first james's parents have not noticed his promblem, later they realised that he has a problem.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X