For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பணக்கார நாடுகளை பின்னுக்குத் தள்ளி முன்னேறும் இந்தியா- சீனா: ஐ.நா. தகவல்

Google Oneindia Tamil News

மெக்சிகோ: பணக்கார நாடுகளை பின்னுக்குத் தள்ளி இந்தியாவும் சீனாவும் முன்னேறி வருவதாக ஐநா அறிக்கை தெரிவித்துள்ளது.

மெக்சிகோவில் வெளியான அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

'வளரும் நாடுகளான இந்தியா, சீனா, பிரேசில் ஆகிய நாடுகள் துரிதமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்த நிலை நீடித்தால் இந்நாடுகள் 2020-ம் ஆண்டு வாக்கில் உலகின் பணக்கார நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்சு, ஜெர்மனி, இத்தாலி ஆகிய நாடுகளை பின்னுக்கு தள்ளிவிடும்.

இந்தியாவும் சீனாவும் கடந்த 20 ஆண்டுகளில் தனிநபர் வருமானத்தை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. இது ஐரோப்பா கண்டமும், வட அமெரிக்கா கண்டமும் தொழில் புரட்சியின்போது அடைந்த வளர்ச்சியை விட அதிகமாகும். தொழிற் புரட்சியின்போது சில லட்சம் மக்கள் மட்டுமே முன்னேறினர். ஆனால் இந்த இரு நாடுகளிலும் பல கோடி மக்கள் முன்னேறியுள்ளனர்.

உலக அளவில் ஏழைகளின் எண்ணிக்கை 1990-ம் ஆண்டு 43 சதவீதமாக இருந்தது. ஆனால் இது 2008-ம் ஆண்டு 22 சதவீதமாக குறைந்துள்ளது. குறிப்பாக சீனாவில் ஏராளமான மக்களின் வாழ்க்கைத் தரத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது'.இவ்வாறு அந்த அறிக்கை கூறுகிறது.

English summary
The developing world's rapid growth has sharply cut extreme poverty, created a new middle class and put the economies of Brazil, China and India on a path to overtake the globe's wealthiest nations, the UN said. China and India doubled their per capita economic output in less than 20 years, a rate twice as fast as Europe and North America experienced during the Industrial Revolution.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X