For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

என் பதவி ஏற்பு விழாவைப் பார்க்க வர செய்யும் செலவை ஏழைகளுக்கு உதவுங்கள் - போப் பிரான்ஸிஸ்

Google Oneindia Tamil News

Pope Francis
ரோம்: தனது பதவி ஏற்பு விழாவை நேரில் காண வருவதற்கு செய்யப்படும் செலவுத் தொகையினை தர்மகாரியங்களுக்காக செலவிடுமாறு என்று புதிய போப்பாக பதவி ஏற்க இருக்கும் பிரான்சிஸ், அர்ஜென்டினா மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உலகெங்கும் வாழும் ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவர்களின், 266 வது தலைமை மதகுருவாக அர்ஜென்டினா நாட்டைச் சேர்ந்த போப் பிரான்சிஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர், வரும் 19ஆம் தேதி புதிய போப்பாக பதவி ஏற்க இருக்கிறார். தங்கள் நாட்டைச் சேர்ந்த மதகுரு புதிய போப்பாக பதவியேற்கும் இனிய நிகழ்வை நேரில் காண்பதற்காக பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் ரோம் நகருக்கு செல்வதற்காக தயாராகி வருகின்றனர்.

இந்நிலையில், அர்ஜென்டினாவுக்கான வாடிகன் தூதரை சந்தித்த போப் பிரான்சிஸ், "எனது பதவியேற்பு விழாவை நேரில் காண்பதற்காக ரோம் நகருக்கு வரும் பெரிய செலவை மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டியதில்லை. இப்படி சொல்வதனால் அவர்களின் வருகையை நான் தடை செய்யவில்லை.

ஆனால், இந்த பயணத்திற்காக ஆகும் செலவை ஏழைகளுக்கான உதவிகளை செய்து, தர்ம காரியங்களில் என் நாட்டு மக்கள் ஈடுபடுவதையே நான் பெரிதும் விரும்புகிறேன்." என தெரிவித்ததாக வாடிகன் அரண்மனை செய்தி தொடர்பாளர் பெடரிகோ லொம்பார்டி கூறியுள்ளார்.

English summary
Saint fransis is swearing as new pope of vatican on 19th of this month. People of argentina is very much egared to witness the awful ceremony. But the new pope has request the people not to come to the ceremony,instead asked to spend that money to the poor people.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X