For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திமுகவின் வாபஸ் அறிவிப்பால் சென்செக்ஸ் கிடுகிடு வீழ்ச்சி

Google Oneindia Tamil News

Sensex
மும்பை: ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்குக் கொடுத்து வந்த ஆதரவை திமுக வாபஸ் பெறுவதாக அறிவித்ததால் மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் கிடுகிடுவென வீழ்ந்து 19,000 புள்ளிகளுக்கும் கீழே வந்து விட்டது.

இலங்கை விவகாரத்தி்ல மத்திய அரசுக்குக் கொடுத்து வந்த ஆதரவை திரும்பப் பெறுவதாக திமுக அறிவித்தது. இது இன்று பங்குச் சந்தையில் எதிரொலித்தது.

திமுகவின் அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து பங்குச் சந்தையில் சென்செக்ஸ் 350 புள்ளிகள் இறங்கி 19,000 புள்ளிகளுக்கும் கீழே சென்செக்ஸ் போனது. அதேபோல நிப்டியும் 100 புள்ளிகள் குறைந்து 5750 ஆக குறைந்தது.

இதற்கிடையே, அரசு நிலையாக இருப்பதாகவும், கவிழாது என்றும் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். அரசுக்குப் பெரும்பான்மை பலம் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். ஆனால் திமுக விலகி விட்டதால் அரசுக்கு வலுவான பெரும்பான்மை இருப்பதாக கூற முடியாது. முக்கிய முடிவுகளை நிறைவேற்றுவதில் நிச்சயம் சிக்கல் வரும் என்று அரசியல் ஆய்வாளர் வினோத் சர்மா தெரிவித்துள்ளார்.

திமுகவுக்கு லோக்சபாவில் 18 எம்.பிக்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
The 30-share BSE Sensex fell as much as 350 points on Tuesday after the DMK announced its decision to pull out of the UPA government. The 50-share NSE Nifty slipped over 100 points and traded below the key 5,750 mark. The 10-year bond yield rose as much as 7 basis points to 7.92 per cent, while the rupee slipped into the red at 54.33 to the dollar. The political uncertainty came on the day the Reserve Bank of India cut interest rates, but disappointed investors saying room for further monetary easing was limited.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X