For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இலங்கை விவகாரம்: மதுரையில் திருமா கட்சியினர் திடீர் சாலை மறியல்

Google Oneindia Tamil News

மதுரை: இலங்கை விவகாரம் தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் மதுரையில் சாலை மறியல் நடத்தப்பட்டது.

தமிழர்களை கொன்றொழித்த இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக அறிவிக்கக் கோரியும், இலங்கையில் தமிழர்களுக்கு தனித் தமிழீழம் பெற்றுத்தர வேண்டியும் அமெரிக்கா கொண்டு வரவுள்ள தீர்மானம் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக வலுவான தீர்மானமாக திருத்தம் செய்து அதை இந்திய அரசே முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள அண்ணா பேருந்து நிலையம் சிவகங்கை சாலையில் சாலை மறியல் நடைபெற்றது.

Sri Lankan row: VCK stages road roko in Madurai

இது குறித்து தகவல் அறிந்த பேலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்தனர். பின்பு அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

இந்த போராட்டதில் தலைமை நிலைய செயலாளர் ஏ.சி.பாவரசு, துணைப் பொதுச் செயலாளர் வெ.கனியமுதன், முற்போக்கு மாணவர் கழக மாநிலத் துணை செயலாளர் அ.செல்லப்பாண்டியன், இரா.பாண்டியம்மாள், முகம்மது ரபீக், அ.மணியரசு, பூபாலன், தென்னிலவன், கொ.ஆறுமுகம், கதிரவன், சிறுத்தகனி, கதிரவன், வரிச்சியூர் பூமிநாதன், புதுதாமரைப்பட்டி ஓவியர்.நா.அழகர்சாமி, அரசமுதுப்பாண்டியன், பரமசிவம், ஆதிவளவன், பனையூர் சேகர், உசிலை பழனிச்சாமி, அனுபப்பானடி பாலகுமார், முத்து, ரமேசு, ப.மார்க்கண்டன் முத்துக்குமார், கரும்பாலை திருமா தேவன், ம.கார்த்திக், ஸ்வீட் ராஜா, ர.அலாவுதீன், ச.வீரையா, கத்தப்பட்டி மலைச்சாமிபாலு மற்றும் நகர, ஒன்றிய முகாம் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

English summary
VCK cadres staged road roko in Madurai in connection with the Sri Lankan row.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X