For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மக்களே தலை பத்திரம்.. தலைக்காயத்தால் வருடத்திற்கு 12% பேர் இறக்கிறார்களாம்!

Google Oneindia Tamil News

கோவை: உலக தலைக்காய விழிப்புணர்வு நாள் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 20 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.

உலக தலைக்காய விழிப்புணர்வு நாள் எதற்காக ஏற்பட்டது என்றால், நம் உடலில் மிகவும் முக்கியமான பகுதி மூளை, மூளையில் விபத்தின் காரணமாக பாதிப்பு ஏற்படும்போது அதனால் ஏற்படும் பக்க விளைவுகள் அதிகமாக உள்ளது.

இந்த உலக தலைக்காய விழிப்புணர்வு நாள், அனுசரிக்கப்பதனால் நாம் தலைக்கு முக்கியமாக மூளைக்கு ஏற்படும் காயங்களை எப்படி குறைப்பது என்று கண்டுபிடித்து, மூளைக்கு ஏற்படும் பாதிப்புகளை குறைக்கலாம்.

ஆண்டுதோறும் 10-12% பேர் மரணம்

ஆண்டுதோறும் 10-12% பேர் மரணம்

உலகில் ஒவ்வொரு ஆண்டும் 10- 12% மக்கள் தலையில் - மூளையில் காயம் ஏற்படுவதினால் இறக்கிறார்கள். விபத்தின்போது 30- 35% கயங்கள் தலை ஏற்படுகிறது.

ஹெல்மட் இல்லாமல் 55% காயம்

ஹெல்மட் இல்லாமல் 55% காயம்

தலைக் கவசம் அதாவது ஹெல்மட் போடாத காரணத்தால் காயமடைவோர் எண்ணிக்கைதான் அதிகம்.அதாவது 55% தலைக் கவசம் இல்லாததினால் இறப்பவர்கள் இரண்டு மடங்கு அதிகம்.

கோமாவுக்குப் போவோர் பலர்

கோமாவுக்குப் போவோர் பலர்

மூளையில் ஏற்படும் காயத்தினால் கோமா (உணர்வற்ற- VEGETATIVE) நிலையில் பல வருஷங்கள் இருப்பவர்கள் பலர். அதனால் தலையில் ஏற்படும் சிராய்ப்பு முதல் கொண்டு, பலத்த மூளையின் காயம் எப்படி ஒருவரின் வாழ்க்கையை மாற்றுகிறது என அனைவரும் புரிந்து கொள்ள உபயோகமாக இருக்கும்.

தலை - மூளையில் காயம் ஏற்பட 4 காரணங்கள் உள்ளன.

விபத்துக்கள்

விபத்துக்கள்

சைக்கிள், இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள், ஆகியவற்றில் செல்லும்போது, சாலையைக் கடப்பவர்கள் மீது இந்த வாகனங்கள் மோதும்போது 50% பேர் தலைக் காயத்தால் பாதிக்கப் படுகிறார்கள்.

கீழே விழுதல்

கீழே விழுதல்

25% தலைக்காயங்கள் விளையாடும்போதும், நடந்து செல்லும் போது வழுக்கி விழுதல், தரைவிரிப்புகள் தடுக்கிவிடுவதாலும் ஏற்படுகிறது.

போராட்டங்கள்-தடியடி

போராட்டங்கள்-தடியடி

20% தலைக்காயங்கள் , வேலை நிறுத்தம், போராட்டங்கள் ஆகியவற்றால் ஏற்படுகிறது. தலையில் காயம் ஏற்படுவதனால், மூளையின் முக்கிய பகுதிகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. மூளையின் பலத்த காயம் ஏற்படுவதினால், ஞாபகமறதி முதற்கொண்டு, உடலின் பாகங்கள் செயலிழந்து போகும் அபாயம் உள்ளது.
தலையில் காயம் ஏற்படுவதால் பின் வரும் விளைவுகள் ஏற்படுகிறது.

தலைவலி, வாந்தி, தலை சுற்றல், சரியாக பேச முடியாத நிலை, ஒரு நிலைப்பாடு இல்லாத நிலை, கை, கால்கள் பலகீனம், காது மற்றும் மூக்கில் இரத்தக்கசிவு, கழுத்துப் பிடிப்பு, மயக்க நிலை, நடப்பதில் சிரமம், தூக்கத்திலிருந்து எழுந்து நடக்கும்போது முடியாத நிலை, ஆகியைவை ஏற்படுகிறது.

தலைக்காயத்தால் வரும் பின்விளைவுகள்

தலைக்காயத்தால் வரும் பின்விளைவுகள்

கை கால்கள் செயலிழந்து போவது, வலிப்பு, கிருமி பாதிப்பு - மூளைக்காய்ச்சல், சரியாக பேசமுடியாத நிலை, பேசுவது புரியாமல் ரகளை செய்யும் நிலை, தீராத தலைவலி, மயக்கம், உயிருக்கு ஆபத்து ஏற்ப்பட்டு இறக்கலாம்.

தலைக்காயங்கள் ஏற்படாமல் தவிர்க்க வழிமுறைகள்

தலைக்காயங்கள் ஏற்படாமல் தவிர்க்க வழிமுறைகள்

இரு சக்கர வாகனத்தில் செல்லுன்போது தலை கவசம் (Helmet) அணிதல், நான்கு சக்கர வாகனத்தில் செல்லும்போது சீட் பெல்ட் அணிதல், குடிபோதையில் எப்போதும் எந்த ஒரு த்கனத்தையும் ஓட்டக் கூடாது, படிக்கட்டில் ஏறும்போது படிக்கட்டு சுவரைப் பிடித்து நடப்பது, இரு சக்கர, மூன்று சக்கர , நான்கு சக்கர வாகனங்களை சீரான வேகத்தில் செல்ல செய்வது, சாலை விதிகளை மதித்து வாகனங்களை ஓட்டுவது.

தலைக் கவசம் அணிவோம், மூளையை காப்போம்

தலைக் கவசம் அணிவோம், மூளையை காப்போம்

தலைக் கவசமானது , கர்ப்பத்தில் இருக்கும் குழந்தையைப்போல மூளையைப் பாதுகாக்கிறது.

கோவையில் விழிப்புணர்வுப் பேரணி

கோவையில் விழிப்புணர்வுப் பேரணி

உலக தலைக்காய விழிப்புணர்வு நாள் தொடர்பாக கோவை இந்திய மருத்துவக்கழகம் , மற்றும் நியுராலிஜிக்கள் சொசைட்டி இணைந்து 20ம் தேதி காலை 9 மணிக்கு விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.

கோவை போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழ்நாடு பிரிவு தலைவர் டாக்டர் எல்.பி. தங்கவேலு விழிப்புணர்வு பலூனை பறக்க விட்டார். இந்திய மருத்துவ சங்கத்தின் கோவை மாவட்ட கிளைத் தலைவர் டாக்டர் ஏ.கே.ரவிக்குமார், நியூமரலாஜிக்கல் சொசைட்டி செயலாளர் டாக்டர் ராஜேஷ் பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்.எஸ்.புரம் மைதானத்தில்

ஆர்.எஸ்.புரம் மைதானத்தில்

ஆர்.எஸ். புரம் மைதானத்திலிருந்து தொடங்கிய பேரணியில் மருத்துவர்கள் , கல்லூரி , நர்சிங் கல்லூரி மாணவர்கள் , பொது மக்கள் , மற்றும் காவலர்கள் கலந்து கொண்டார்கள். பேரணி இந்திய மருத்துவ சங்க வளாகத்தில் முடிவடைந்தது.

English summary
World head injury day was observed in Coimbatore. A rally was organised on the eve and doctors, students and general public attended the rally.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X