For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்தியாவில் போலி பல்கலைக்கழங்களை மூட பிரதமருக்கு கோரிக்கை

By Siva
Google Oneindia Tamil News

Requesting the PM to shut fake varsities in India
சென்னை: இந்தியாவில் உள்ள போலி பல்கலைக்கழகங்களை மூடுமாறு பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் 21 போலி பல்கலைக்கழகங்கள் இருப்பதை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (யூ.ஜி.சி) கண்டுபிடித்துள்ளது. மாணவர்களின் நலன் கருதி போலி பல்கலைக்கழகங்களின் பெயர்களை யூஜிசி வெளியிட்டு வருகிறது. இதே போன்று அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சிலும் (ஏ.ஐ.சி.டி.இ.) தங்களிடம் அங்கீகாரம் பெறாமல் தொழில்நுட்ப வகுப்புகள் நடத்தும் பொறியியல் கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களின் பெயர்களை வெளியிட்டது. இதனால் பொறியியல் மற்றும் இதர படிப்புகளில் சேரும் மாணவர்கள் அந்த கல்லூரி அங்கீகாரம் பெற்றதா இல்லையா என்பதை பார்த்துவிட்டு சேரவும்.

போலி பல்கலைக்கழகங்களில் சேரும் மாணவர்கள் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். அவர்களுக்கு அங்கீகரிக்கப்படாத சான்றிதழ் வழங்கப்படுகிறது. அந்த சான்றிதழ் மற்றும் டிகிரியை வேறு எந்த கல்லூரிகளும், நிறுவனங்களும் ஏற்றுக் கொள்வதில்லை. அதனால் மாணவர்களே உஷார்.

இந்நிலையில் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு டெல்லியைச் சேர்ந்த கெரியர்ஸ்360 என்ற பத்திரிக்கை பதிப்பாளர் மகேஸ்வர் பெரி என்பவர் இந்தியாவின் கல்வி முறையை சுத்தப்படுத்த உதவுங்கள் என்ற தலைப்பில் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கோரிக்கை விடுத்துள்ளார். கோரிக்கை மனுவில் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு போலி பல்கலைக்கழங்கள் மீதும் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று அவர் பிரதமரை வலியுறுத்தியுள்ளார்.

(அந்த கோரிக்கை மனுவில் உடனே கையெழுத்திடுங்கள்)

பெற்றோர், மாணவர்கள், தொழில் முனைவோர், பங்குதாரர்கள் மற்றும் இந்திய குடிமகன்கள் அனைவரும் இந்த கோரிக்கை மனுவில் கையெழுத்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இது குறித்த உங்கள் கருத்துகளை எங்களுடன் பகிர்ந்து கொள்வதோடு இதை பிறருக்கும் தெரிவியுங்கள். கல்வி உங்கள் உரிமை. அதில் ஏமாந்துவிடாதீர்கள்.

போலி பல்கலைக்கழகங்களை மூட உடனே செயல்படுங்கள். ஒரு இந்திய குடிமகனாக எங்கள் பங்கை செய்துவிட்டோம். இந்த கோரிக்கை மனுவில் கையெழுத்திட்டு கல்வித் திட்டம் வளம் பெற உதவுங்கள்.

English summary
In order to put an end to the fake universities in India, Mr.Maheshwar Peri, a publisher of Careers360 magazine, New Delhi has highly held a petition which says "HELP US CLEAN UP INDIA's EDUCATION SYSTEM". In his petition he highlighted that in today's world, the fake degrees are up for sale publicly. Students are just being threatened of hearing the words Fake, Unrecognized or Unauthorized institutes. He asks the Prime Minister to ensure that the FIR's are being filed by the administration against each and every fake university across India. We request you to sign the petiion to clean up the education system.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X