For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெப்ஸி அதேதான்.. ஆனா பாட்டிலை மாத்திட்டாங்க!

Google Oneindia Tamil News

நியூயார்க்: 17 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக பெப்ஸி தனது பாட்டிலை மாற்றியுள்ளது. அதாவது டிசைனை மாற்றியுள்ளது. இனி புதிய வடிவிலான பாட்டில்களில் பெப்ஸியை அடைத்து விற்கப் போகிறார்கள்.

567 கிராம் பெப்ஸிக்கான பாட்டில் இதுவாகும்.புதிய வடிவிலான இந்த பாட்டில் பார்க்கவே நளினமாகவும் இருக்கிறது. கையில் பிடிப்பதற்கு வசதியாக, சிக்கென்ற இடையுடன் இந்த பாட்டில் பளிச்சென இருக்கிறது.

முன்பு லேபளை பெரிதாக ஒட்டியிருப்பார்கள்.இதனால் உள்ளே இருக்கும் பெப்ஸியை முழுமையாக பார்க்க முடியாது. ஆனால் தற்போது பேப்பரை சுருக்கி விட்டனர். இதனால் பாட்டிலுக்குள் இருக்கும் பெப்ஸி பெரும்பாலும் வெளியே தெரிகிறது.

கொடி கட்டிப் பறக்கும் கோக்

கொடி கட்டிப் பறக்கும் கோக்

கடந்த சில வருடங்களாக உலக அளவில் கோக் முன்னிலை பெற்று வருகிறது. இதனால் மார்க்கெட் சரிவைக் கண்டுள்ள பெப்சி நிறுவனம் அதை நிமிர்த்துவதற்காக பல்வேறு சீரமைப்பு நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. அதில் ஒன்றுதான் இந்த பாட்டில் சைஸ் மாற்றம்.

ஏப்ரல் முதல் சிக் பாட்டில்

ஏப்ரல் முதல் சிக் பாட்டில்

ஏப்ரல் மாதம் இந்த புத்தம் புதிய சிக் பாட்டில் விற்பனைக்கு வரவுள்ளதாம். உலகம் பூராவும் இந்த புதிய பாட்டில்களை விற்பனைக்கு இறக்கவுள்ளனர்.

96ல் வந்த பழைய பாட்டில்

96ல் வந்த பழைய பாட்டில்

தற்போது புழக்கத்தில் உள்ள புழக்கத்தி்ல உள்ள பாட்டில்கள் முழுமையாக அகற்ற 2 வருடங்கள் வரை ஆகலாம் என்று தெரிகிறது. இவற்றை 1996ம் ஆண்டு புழக்கத்திற்கு விட்டது பெப்ஸி என்பது குறிப்பிடத்தக்கது.

93 முதல் கோக் பாட்டில்

93 முதல் கோக் பாட்டில்

அதேசமயம், கோககோலா நிறுவனம் தற்போது புழக்கத்தில்விட்டுள்ள பாட்டில்கள் 1993ம் ஆண்டு அறிமுகப்படுத்தியவையாகும். அதில் சில மாற்றங்களை அது அவ்வரப்போது செய்து வந்தது. இருப்பினும் பெரிய அளவிலான மாற்றத்தை அது மேற்கொள்ளவி்ல்லை. பாட்டிலின் தலைப் பகுதியை சிறிதாக்கியதே அது
செய்த பெரிய மாற்றமாகும்.

வட அமெரிக்காவில் பெரும் நஷ்டம்

வட அமெரிக்காவில் பெரும் நஷ்டம்

வட அமெரிக்காவில் கடந்த ஆண்டு 4 சதவீத விற்பனைச் சரிவைக் கண்டுள்ளது பெப்ஸி என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Pepsi is rolling out a new shape for its 567-gram bottle for the first time in about 17 years. The new bottle has a contoured bottom half that appears easier for holding, and the wraparound label is shorter so that more of the drink is exposed.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X