For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காலவரையற்ற உண்ணாவிரதம் தொடங்கினார் ஆம் ஆத்மி கெஜ்ரிவால்!!

By Shankar
Google Oneindia Tamil News

Arvind Kejriwal
டெல்லி: டெல்லி அரசுக்கு எதிராக இன்று காலவரையற்ற உண்ணாவிரதத்தைத் தொடங்கினார் ஆத் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால்.

டெல்லி அரசு அண்மையில் மின் கட்டணம், வீட்டு வரி ஆகியவற்றை உயர்த்தியது. இதை பலரும் எதிர்த்து வருகின்றனர். இதை அடுத்து தானும் களத்தில் இறங்கப் போவதாக ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்திருந்தார்.

இதன்படி, டெல்லியில் உள்ள 264 வார்டுகளில் உள்ள வீட்டு உரிமையாளர்களைச் சந்தித்து, ஆம் ஆத்மி கட்சியினர் பிரசார இயக்கத்தை நடத்தி வருகின்றனர்.

அடுத்து கட்சியின் தலைவர் அர்விந்த் கெஜ்ரிவால் டெல்லியில் இன்று காலை முதல் காலவரையரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கெஜ்ரிவால், "டெல்லி அரசின் சட்டவிரோத வரிஉயர்வுக்கு எதிராக மக்களைத் திரட்டிப் போராட வேண்டிய நேரம் வந்துவிட்டது.

மின்சாரம் மற்றும் நீர் தயாரிப்பு நிறுவனங்களுடன் கூட்டணி சேர்ந்து கொண்டு தில்லி முதல்வர் ஷீலா தீட்சித் கட்டணங்களை உயர்த்தியுள்ளார். தற்போதைய கட்டணங்களைச் செலுத்த வீடடின் உரிமையாளர்கள், மற்றவர்களிடம் கடன் வாங்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனை கண்டித்து இந்த உண்ணாவிரதத்தைத் தொடங்கியுள்ளோம், என்றார்.

முன்னதாக இந்த உண்ணாவிரதத்தில் அண்ணா ஹசாரேவும் பங்கேற்பார் என்றார் கெஜ்ரிவால். ஆனால் வரமாட்டேன் என்று உடனடியாக மறுப்பு தெரிவித்துவிட்டார் ஹஸாரே.

English summary
Aam Aadmi party leader Arvind Kejriwal just began his fast against Delhi govt at the Capitol today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X