For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அசாமில் டைனோசரஸ் எலும்புக்கூடு கண்டுபிடிப்பு

Google Oneindia Tamil News

சிராங்: குக்லங் ஆற்றுக்கரை வழியாக பாதயாத்திரை சென்ற போது, கண்டுபிடிக்கப்பட்ட 6 அடி உயரமுள்ள எலும்புக்கூடு டைனோசரஸுடையது என உறுதி செய்யப்பட்டது .

அசாம் மாநிலம் சிராங் மாவட்டத்தை சேர்ந்த நாக்ரபட்டிகுரி கிராமத்தை சேர்ந்தவர்கள் அங்குள்ள ஒரு கோவிலுக்கு கடந்த மாதம் 24-ம் தேதி பாதயாத்திரை மேற்கொண்டனர். அங்குள்ள குக்லங் ஆற்றுக்கரை வழியாக சென்றபோது, 6 அடி உயரமுள்ள எலும்புக்கூட்டை கண்டுபிடித்தனர்.

அதில் ஒரு பக்தர் அந்த எலும்புக்கூட்டை அவரது வீட்டிற்கு எடுத்து சென்றுவிட்டார். பின்னர் இச்செய்தி அப்பகுதி பத்திரிக்கையாளர்களுக்கு தெரியவர அதை வன இலாகாவினருக்கு தெரிவித்தனர். உடனடியாக அங்கு வந்த வன அதிகாரிகள் அந்த எலும்புக்கூட்டை கைப்பற்றினர்.

பின்னர் மத்திய வன விலங்கு அறக்கட்டளை அதிகாரிகள், கால்நடை வளர்ப்பு நிபுணர்கள் அந்த எலும்புக்கூட்டை சோதித்தனர். பிறகு தான் அது முற்காலத்தில் வாழ்ந்த டைனோசரசின் எலும்புக்கூடு என்று தெரியவந்தது.

இந்த டைனோசரஸ் எலும்புக்கூடு கிடைத்த இடத்திற்கு அருகே, உலகப்புகழ் பெற்ற "மானாஸ்" வனவிலங்கு சரணாலயம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
A near intact skeleton of what could be of a dinosaur has been found in Assam's Chirang district, a senior forest official today. The six feet high skeleton was originally found on the bank of the Kuklung river by villagers of Nakrapatiguri when they went on a pilgrimage to a temple there on February 24, Divisional Forest Officer Brahmananda Patiri said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X