• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

திமுக செயற்குழுவில் அழகிரி, நெப்போலியன் ஆப்சென்ட்! குஷ்பு ஆஜர்!!

By Mathi
|
Alagiri and Napoleon
சென்னை: காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசிலிருந்தும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இருந்தும் வெளியேறிய நிலையில் சென்னையில் நடைபெற்ற திமுகவின் அவசர செயற்குழுக் கூட்டத்தில் அக்கட்சியின் தென்மண்டல அமைப்புச் செயலாளரும் முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க. அழகிரி, அவரது ஆதரவாளர் நெப்போலியன் ஆகியோர் பங்கேற்கவில்லை.

ஈழத் தமிழர் விவகாரத்தில் மத்திய அரசுக்கான ஆதரவையும் காங்கிரசுடனான கூட்டணியையும் முறித்துக் கொண்டது திமுக. இதைத் தொடர்ந்து விரைவில் வர இருக்கும் லோக்சபா தேர்தலுக்கான வியூகம் வகுக்கவும் ஈழத் தமிழர் பிரச்சனையில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்கவும் சென்னையில் திமுக தலைமை செயற்குழு கூட்டம் அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் .இன்று காலை 10.30 மணிக்கு கூடியது. திமுக தலைவர் கருணாநிதி தலைமையிலான இக்கூட்டம் சுமார் ஒன்றரை மணி நேரம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர்களான மு.க. அழகிரி, நெப்போலியன் இருவரும் பங்கேற்கவில்லை. மத்திய அரசுக்கான ஆதரவை திமுக வாபஸ் பெற்ற பின்னர் மத்திய அமைச்சர் ஜி.கே. வாசனை தனியே சந்தித்து ரகசியம் பேசியவர்கள் அழகிரியும் நெப்போலியனும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் திமுகவில் நீடிப்பாரா? இல்லையா? என்ற கேள்விகளை எழுப்பி வைத்த நடிகை குஷ்பு இன்றைய செயற்குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
English summary
The DMK, which decided to pull out UPA govt over the latter's reluctance to censure Sri Lanka in the United Nations Human Rights Council for alleged war crimes committed on Tamils, has convened an emergency meeting of the party executive council meeting on tomorrow to chart out the future course of action.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more