For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அமெரிக்காவில் மனைவியை கொன்று, வேக வைத்த சமையல் கலைஞருக்கு 15 ஆண்டுகள் சிறை

By Siva
Google Oneindia Tamil News

லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவில் மனைவியைக் கொன்று அவரது உடலை வேக வைத்த சமையல் கலைஞருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைத்துள்ளது.

அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸைச் சேர்ந்தவர் டேவிட் வியன்ஸ்(49). சமையல் கலைஞர். அவரும் அவரது மனைவி டான் வியன்ஸும்(39) சேர்ந்து ஒரு ஹோட்டல் நடத்தி வந்தனர். இந்நிலையில் கடந்த 2009ம் ஆண்டு தனது மனைவி டான் வியன்ஸை(39) கொன்று வேக வைத்ததாக குற்றம் சாட்டப்பட்டவர் டேவிட். அவரது மனைவியின் உடல் இதுவரை கிடைக்கவில்லை.

அப்பொழுது தான் செய்த குற்றத்தை அவர் ஒப்புக் கொண்டார். ஆனால் தற்போது அதை மறுத்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மலையில் இருந்து கீழே விழுந்த டேவிட்டின் பெரும்பாலான எலும்புகள் முறிந்தன. இதையடுத்து அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதில் இருந்து அவர் சக்கர நாற்காலியில் தான் உள்ளார்.

அவர் 2 ஆண்டுகளுக்கு முன்பு போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், எனது மனைவியின் கை மற்றும் கால்களை கட்டி அவரது வாயையும் டேப் போட்டு கட்டிவிட்டு நான் தூங்கிவிட்டேன். எழுந்து பார்த்தபோது அவர் இறந்துவிட்டார். உடலை அப்புறப்படுத்த அதை 4 நாட்கள் வேக வைத்தேன் என்றார்.

ஆனால் தற்போது அவர் கூறியுள்ளதாவது, ஆபரேஷன் முடிந்த உடன் போலீசாருக்கு ஏதோ மயக்கத்தில் வாக்குமூலம் அளித்துவிட்டேன். நான் என் மனைவியைக் கொல்லவில்லை என்றார். இந்த வழக்கை விசாரித்த லாஸ் ஏஞ்சல்ஸ் நீதிமன்றம் டேவிட்டுக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நேற்று தீர்ப்பளித்தது.

English summary
David Viens, a chef in Los Angeles was sentenced to 15 years imprisonment for killing his wife and boiled her body for 4 days.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X