For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஹெலிகாப்டர் ஊழலில் தியாகி லஞ்சம் வாங்கியது உண்மை: சிபிஐ

Google Oneindia Tamil News

Tyagi
டெல்லி: ஹெலிகாப்டர் ஊழல் விவகாரத்தில் விமானப்படை முன்னாள் தளபதி எஸ்.பி.தியாகி லஞ்சம் வாங்கியது உண்மை தான் என சிபிஐ.,யின் முதல்கட்ட விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2004-2005 ம் ஆண்டில் தியாகி, அவரது உறவினர்கள் மூலம் லஞ்சம் பெற்றுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிபிஐ அறிக்கை:

எண்ணிக்கை குறிப்பிடப்படாத ஒரு பெரிய தொகை, ஃபின்மெக்கானியாவைச் சேர்ந்த இடைத்தரகர் ஒருவர் மூலம் இந்தியாவிற்கு அளிக்கப்பட்டுள்ளது; இத்தாலியில் இருந்து பெறப்பட்ட ஆவணங்கள் அனைத்தையும் ஆராய்ந்த பின்னர் இவ்வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் அனைவரிடமும் விசாரணை துவக்கப்படும்; அமலாக்கப் பிரிவினரிடம் இருந்து பெறப்பட்ட முக்கிய ஆவணங்களின்படி ஹெலிகாப்டர் ஒப்பந்த விவகாரத்தில் ரூ.362 கோடி திரும்பப் பெறப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது;

பெறப்பட்ட பெரும்பாலான ஆவணங்களும், கைப்பற்றப்பட்ட வங்கி தாள்களும் தியாகியின் உறவினர்களிடம் பணம் ஒப்படைக்கப்பட்டதை உறுதி செய்கிறது; தியாகியின் சகோதரர்களான ஜூலி, தோஸ்கா மற்றும் சந்தீப் தியாகி ஆகியோரிடம் இருந்து 1.24 லட்சம் யூரோக்களும், மேலும் 2 லட்சம் யூரோக்களும் கைப்பற்றப்பட்டுள்ளது; எஸ்.பி.தியாகி, விமானப்படை தளபதியாக இருந்த போது 2004ல் இந்த தொகை பெறப்பட்டுள்ளது. இவ்வாறு சிபிஐ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தியாகியிடம் விசாரணை:

தியாகியிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது அந்த பணம், ஹெலிகாப்டர் ஒப்பந்த விவகாரத்தில் சில ஆலோசனைகள் வழங்கியதற்காக தனக்கு ஆலோசனை கட்டணமாக வழங்கப்பட்டதாக அவர் கூறி உள்ளார்.

அதே சமயம் ஐடிஎஸ் இன்போடெக் மற்றும் ஏரோமேட்ரிக்ஸ் நிறுவனம் மூலம் 5.6 மில்லியன் யூரோக்கள் தியாரியின் சகோதர்கள் பெயருக்கு வங்கி மூலம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கிறிஸ்டியன் மைக்கேல் மூலம் இந்தியாவிற்கு மற்றுமொரு 30 மில்லியன் யூரோக்கள் தியாகியின் பங்காக வழங்கப்பட்டுள்ளதாக சிபிஐ தெரிவித்துள்ளது.

சிறு சிறு தொகையாக ...

பெரும் தொகையாக மட்டுமின்றி சிறு சிறு தொகையாக பிரிக்கப்பட்டும் தியாகி மற்றும் அவரது சகோதரர்கள் பெயர்களுக்கு வங்கிகள் மூலம் பண பரிவர்த்தனை நடைபெற்றுள்ளது. தியாகிக்கு அளிக்கப்பட்ட மொத்த தொகை எவ்வளவு என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், அந்த தொகையை தியாகி எந்த வங்கி அல்லது சொத்தில் முதலீடு செய்துள்ளார் என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருவதாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தியாகி மற்றும் அவரது சகோதரர்கள் உட்பட 13 பேர்களை இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியாக சிபிஐ பதிவு செய்துள்ளது. மேலும் இவர்கள் மீது கடந்த வாரம் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஹெலிகாப்டர் பறக்கும் உயரத்தை 6000 மீட்டரில் இருந்து 4500 மீட்டராக குறைக்க தியாகி உத்தரவிட்டது தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

English summary
The CBI's initial investigations into the AgustaWestland scam has found that former IAF chief SP Tyagi was indeed bribed by middlemen around the same time - 2004-2005 - that his cousins were given money, highly placed sources said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X