For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அக்டோபர் மாதம் முதல் செல்போன் ரோமிங் கட்டணம் ரத்து: கபில் சிபல்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Free national roaming by October: Kapil Sibal
டெல்லி: அக்டோபர் மாதம் முதல் செல்போன் ரோமிங் கட்டணம் ரத்து செய்யப்படும் என்று மத்திய தொலை தொடர்புத்துறை அமைச்சர் கபில் சிபல் கூறியுள்ளார். அதேபோல் இணையதளங்களை கண்காணிக்கும் எண்ணம் எதுவும் இல்லை என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற தேசிய பத்திரிகை ஆசிரியர்கள் மாநாட்டில் பேசிய கபில்சிபல் கூறியதாவது:

சுதந்திரமான ஊடகமாக இணையதளங்கள் தொடர்ந்து செயல்படும். இணைய தளங்களை கண்காணிக்கும் எண்ணம் எதுவும் மத்திய அரசுக்கு இல்லை.

கம்ப்யூட்டர் சிப் உற்பத்திக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். வெளிநாடுகளை சேர்ந்த நிறுவனங்கள் இந்தியாவில் கம்ப்யூட்டர் சிப் தயாரிக்க முன்வந்தால் வரிச்சலுகை போன்றவை வழங்கப்படும் என்றும் அமைச்சர் கபில் சிபல் கூறியுள்ளார்.

ரோமிங் கட்டணம் நீக்கம்

அக்டோபர் மாதம் முதல் ரோமிங் கட்டணம் நீக்கப்படும். நாட்டில் எந்த பகுதியில் இருப்பவர்களும் பிற பகுதியில் உள்ளவர்களை தொடர்பு கொள்ள கூடுதல் கட்டணம் இன்றி தொடர்பு கொள்ள முடியும்.

ஒரு மாநிலத்தில் உள்ள போனில் இருந்து மற்றொரு மாநிலத்தில் உள்ள போனுக்கு பேச ரோமிங் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. தற்போது நிமிடத்துக்கு ஒரு ரூபாய் ரோமிங் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதே போல் ஒரு மாநிலத்தில் உள்ள செல்போனை மற்றொரு மாநிலத்துக்கு கொண்டு சென்று பேசினாலும் ரோமிங் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இந்த நிலையில் வருகின்ற அக்டோபர் மாதம் முதல் ரோமிங் கட்டணத்தை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் மாநிலம் விட்டு மாநிலம் செல்லில் பேசும் வாடிக்கையாளர்களுக்கு கட்டணம் குறையும் என்று எதிர்பார்க்கலாம்.

English summary
National roaming charges may soon be a thing of the past. Telecom minister Kapil Sibal said that the government is trying to start free national roaming by October.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X