For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சிங்கள ராணுவத்தில் 95 தமிழ் பெண்களை சேர்த்த ராஜபக்சே அரசு

By Siva
Google Oneindia Tamil News

Rajapakse
கொழும்பு: இலங்கை ராணுவத்தில் 95 தமிழ் பெண்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இலங்கையில் நடந்த இறுதிகட்டப் போரின் போது சிங்கள ராணுவம் லட்சக் கணக்கான தமிழ் மக்களை கொடூரமான முறையில் கொன்று குவித்தது. ராணுவத்தின் மனித உரிமை மீறலை எதிர்த்து உலக மக்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் ராணுவத்தில் அனைத்து சமுதாய மக்களையும் சேர்ப்பதில் ராஜபக்சே அரசு தீவிரம் காட்டி வருகிறது. வடக்கு மாகாணத்தில் அதுவும் விடுதலைப் புலிகளின் முக்கிய பகுதியாக விலங்கிய கிளிநொச்சி ராணுவ தலைமையகத்தில் 95 தமிழ் பெண்கள் பணியமர்த்தப்பட்டிருக்கிறார்கள். இலங்கை ராணுவத்தில் இத்தனை தமிழ் பெண்களை சேர்த்திருப்பது இதுவே முதல் தடவை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வடக்கு பகுதியில் வசிக்கும் தமிழர்களுக்கும், ராணுவத்திற்கும் இடையே நல்லுறவு மற்றும் ஒருங்கிணைப்பை ஏற்படுத்த தமிழ் பெண்கள் பணியமர்த்தப்பட்டுள்ளதாக பிரிகேடியர் ரத்னசிங்கம் தெரிவித்துள்ளார்.

English summary
When the world is condemning the human rights violation of the Sri Lankan army, 95 Tamil women are inducted into it.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X