For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மத்தியில் காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்க்கும் திட்டம் இல்லை: செயற்குழுவில் அன்பழகன்

By Chakra
Google Oneindia Tamil News

Anbazhagan
சென்னை: காங்கிரஸ் கூட்டணியில் இருந்து திமுக விலகினாலும் மத்தியில் ஆட்சியைக் கவிழ்க்கும் எண்ணம் இல்லை என்று இன்று நடந்த திமுக செயற்குழுக் கூட்டத்தில் அக் கட்சியின் பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன் பேசியுள்ளார்.

இதன்மூலம் மத்திய அரசு, காங்கிரஸ் மீது திமுக கடுமையான நிலையை மேற்கொள்ள வாய்ப்பில்லை என்று தெரிகிறது.

இந்தக் கூட்டத்தில் பேசிய அன்பழகன், காங்கிரஸ் மீது கடுமையாக தாக்குதலைத் தொடுத்தாலும், மத்தியில் மதவாத சக்திகள் ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது என்பதில் திமுக உறுதியாக உள்ளதாகவும், அந்தப் பொறுப்பை உணர்ந்து திமுக செயல்படும் என்றும், ஆட்சியைக் கவிழ்க்கும் திட்டம் ஏதும் இல்லை என்றும் கூறியதாகத் தெரிகிறது.

கருணாநிதி பேசவில்லை..

தொண்டையில் வலி காரணமாக கடந்த சில நாட்களாக அவதிப்பட்டு வரும் கருணாநிதி, இன்றைய கூட்டத்தில் பேசவில்லை. அதே நேரம் தான் பேச நினைத்தை பேராசிரியர் மூலமாக கருணாநிதி எடுத்துச் சொல்லிவிட்டார் என்கிறார்கள்.

அதே நேரத்தில் மத்தியில் காங்கிரஸ் அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளிப்பது போன்ற எந்த காரியத்திலும் ஈடுபடுவதில்லை என்றும், அதைச் செய்தால் மீண்டும் காங்கிரஸ் கூட்டணிக்குத் திரும்பிவிட்டதைப் போன்ற கருத்து உருவாகிவிடும் என்றும் செயற்குழுவில் கருத்து எடுத்து வைக்கப்பட்டது. இதை திமுக தலைமை ஏற்றுக் கொண்டுள்ளது.

English summary
After snapping ties with the Congress and pulling out its ministers from the Union government, the DMK went easy on the Centre on Monday during an executive committee meeting held at the party headquarters in the city. The DMK general secretary K Anbazhagan reportedly told leaders that the party is not ready to topple the government. "The Congress gave our party a lot of problems. But, we cannot allow communal forces to form a government," an executive committee member told
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X