• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கேஸ் கசிவு ஏற்பட்டால் புகார் செய்ய 24 மணி நேர இலவச தொலைபேசி வசதி

By Mayura Akilan
|

சென்னை: இந்தியன் ஆயில் நிறுவனம் இன்டேன் கேஸ் வாடிக்கையாளர்களுக்காக புதிய இலவச தொலைபேசி வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது. அந்த எண் 1800-425-247-247. தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள இன்டேன் வாடிக்கையாளர்களுக்கு உதவுவதற்காக இந்த வசதி தொடங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் 80 லட்சம் கேஸ் இணைப்புகள் உள்ளன. 475 ஏஜென்சிகளின் கீழ் இந்த வாடிக்கையாளர்கள் உள்ளார்கள். தற்போது அவசர தேவைக்கு 3 செல்போன் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அதை டிஸ்ட்ரிபியூட்டர்கள் கையாளுகிறார்கள்.

அலுவலக நேரம் தவிர, மற்ற நேரங்களில் அவசர உதவிக்கு புகார் செய்ய முடியாத நிலை இருந்தது. எனவே இந்தியன் ஆயில் நிறுவனம் இந்த புதிய சேவை வசதியை இன்று முதல் ஏற்படுத்தி உள்ளது. இந்த தொலைபேசி மாலை 5 மணி முதல் மறுநாள் காலை 9 மணி வரை செயல்படும். சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களில் 24 மணிநேரமும் இயங்கும்.

கேஸ் கசிவு பற்றி இரவு நேரத்தில் புகார் செய்தாலும் உடனடியாக சம்பந்தப்பட்ட பகுதி மெக்கானிக்கு உடனடியாக தகவல் கொடுக்கப்படும். உடனடியாக அவர் கேஸ் கசிவை பார்த்து விட்டு கால்சென்டருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

இந்த புதிய இலவச தொலைபேசி வசதியை இந்தியன் ஆயில் நிறுவன செயல் இயக்குனர் வி.கே. ஜெயச்சந்திரன் இன்று மாலையில் தொடங்கி வைக்கிறார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
English summary
Indian Oil Corporation to introduce 24 hours toll free number for Gas leakage complaint.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more