For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பி.இ. மாணவர்களின் முதல் சாய்ஸ் கூகுளில் வேலை.. அடுத்தது மைக்ரோசாப்ட், இன்போசிஸ்!

By Chakra
Google Oneindia Tamil News

சென்னை: இந்தியாவில் கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐடி உள்ளிட்ட கம்ப்யூட்டர் பொறியியல் படிப்பு பயிலும் மாணவர்கள் பணியில் சேர விரும்பும் நிறுவனங்களில் கூகுள் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. அடுத்த இடத்தை மைக்ரோசாப்ட்டும், இன்போசிஸ் நிறுவனமும் பிடித்துள்ளது.

சர்வதேச கருத்துக் கணிப்பு நிறுவனமான நீல்சன் நடத்திய 'Campus Track Technology School survey' என்ற சர்வேயில் இந்த விவரம் தெரியவந்துள்ளது.

73 கல்லூரிகளில் 2,500 மாணவர்களிடம்..

73 கல்லூரிகளில் 2,500 மாணவர்களிடம்..

இந்த சர்வே கடந்த ஆண்டு ஜூன் முதல் ஆகஸ்ட் மாதம் வரை நாடு முழுவதும் உள்ள 73 தொழில்நுட்ப, பொறியியல் கல்லூரிகளில் 2,500 மாணவர்களிடம் கருத்தைக் கேட்டு நடத்தப்பட்டது.

ஆண்டு வருமானம் ரூ. 11 லட்சம் வேண்டும்:

ஆண்டு வருமானம் ரூ. 11 லட்சம் வேண்டும்:

இந்த மாணவர்கள் தங்களது துவக்க ஊதியமாக ஆண்டுக்கு ரூ. 11 லட்சம் எதிர்பார்க்கின்றனர். கடந்த ஆண்டு இந்த எதிர்பார்ப்பு ரூ. 9.3 லட்சமாக இருந்தது. இந்த ஆண்டு தங்களது ஊதிய எதிர்பார்ப்பை 20 சதவீதம் உயர்த்தியுள்ளனர் மாணவர்கள்.

கூகுள், மைக்ரோசாப்ட், இன்போசிஸ்:

கூகுள், மைக்ரோசாப்ட், இன்போசிஸ்:

மாணவர்கள் சேர விரும்பும் நிறுவனங்கள் என்ற சாய்ஸ் கொடுக்கப்பட்டபோது பெரும்பாலானவர்கள் தேர்வு செய்தது கூகுள் நிறுவனத்தைத் தான். அடுத்த இடத்தை மைக்ரோசாப்ட் பிடித்துள்ளது. 3வது இடத்தை இன்போசிஸ் பிடித்தது.

டிசிஎஸ், ஐபிஎம், பேஸ்புக்:

டிசிஎஸ், ஐபிஎம், பேஸ்புக்:

இதற்கு அடுத்த 3 இடங்களை டிசிஎஸ், ஐபிஎம், பேஸ்புக் ஆகியவை பிடித்துள்ளன.

சாப்ட்வேர் மட்டுமே தொழில் அல்ல..

சாப்ட்வேர் மட்டுமே தொழில் அல்ல..

இன்னொரு நல்ல விஷயமும் இந்த சர்வேயில் தெரியவந்துள்ளது. படித்துவிட்டு சாப்ட்வேர் நிறுவனத்துக்கு வேலைக்குப் போவதே ஜென்ம சாபல்யம் என்று கருதாமல், ஏராளமான மாணவர்கள் எரிசக்தித்துறை, ஆட்டோமொபைல், செமிகண்டக்டர், மின்துறை, டெலிகாம் போன்ற துறைகளில் சேரவும் ஆர்வம் காட்டியுள்ளனர்.

63 சதவீதம் ஐடி தான்..

63 சதவீதம் ஐடி தான்..

63 சதவீத மாணவர்கள் ஐடி, சாப்ட்வேர் துறைகளில் சேரவே விருப்பம் தெரிவித்தாலும் மிச்சமுள்ள மாணவர்களில் பெரும்பாலானோர் எரிசக்தித்துறையிலும், அடுத்தபடியாக ஆட்டோமொபைல் துறையில் சேரவும், மற்றவர்கள் செமிகண்டக்டர், மின்துறை, டெலிகாம் துறையில் சேரவும் ஆர்வம் காட்டியுள்ளனர்.

இவர்களில் பலர் சேர விரும்பும் நிறுவனமாக பிஎச்இஎல் அரசு நிறுவனமும், எல் அண்ட் டி நிறுவனமும், என்டிபிசி பொதுத்துறை நிறுவனமும் உள்ளன.

3 வருடத்தில் பணி மாறுவோம்..

3 வருடத்தில் பணி மாறுவோம்..

அதே போல சர்வேயில் 50 சதவீத மாணவர்கள் பணியில் சேர்ந்த 3 வருடத்தில் அதைவிட்டு விலகி உயர் படிப்புக்குச் செல்வோம், இன்னொரு நல்ல வேலைக்குப் போவாம் என்றும் கூறியுள்ளனர்.

English summary
The Information Technology sector is the most preferred choice for India's engineering students, with Google, Microsoft and Infosys emerging as the top three most desired employers among them, according to a survey by market insights and information provider Nielsen. As per the Nielsen's Campus Track Technology School survey 2012, the Class of 2013 is looking at a starting salary of over Rs 11 lakh per annum, a 20 per cent rise from the previous batch, where the average expected starting salary was Rs 9.3 lakh.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X