For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஏப்ரல் முதல் கூடங்குளம் முதல் அணு உலை இயங்கும்: புதினுக்கு மன்மோகன் உறுதி

By Siva
Google Oneindia Tamil News

Manmohan Singh
டர்பன்: கூடங்குளம் அணு மின் நிலையத்தில் உள்ள முதல் உலை வரும் ஏப்ரல் மாதம் முதல் செயல்படத் துவங்கும் என்று பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மன்மோகன் சிங் டர்பன் சென்றுள்ளார். அங்கு அவர் நேற்றிரவு ரஷ்ய அதிபர் புதினை சந்தித்து பேசினார். அப்போது பிரதமர் புதினிடம் கூறுகையில்,

கூடங்குளம் அணு மின் நிலையத்தில் உள்ள முதல் அணு உலை ஏப்ரல் மாதம் முதல் செயல்படத் துவங்கும் என்பதை உங்களிடம் தெரிவித்துக் கொள்கிறேன். 3 மற்றும் 4வது உலைகள் அமைக்க பல்வேறு அனுமதிகள் பெறும் பணிகள் நடந்து வருகின்றன என்றார்.

இந்த சந்திப்பின்போது பிரதமருடன் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், வர்த்தக அமைச்சர் ஆனந்த் சர்மா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் உள்ளிட்டோர் இருந்தனர்.

கூடங்குளம் அணு மின் நிலையத்தை மூட வேண்டும் என்று வலியுறுத்தி மக்கள் போராடி வரும் நிலையில் பிரதமரின் அறிவிப்பு அவர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

English summary
The controversial Kudankulam Unit I of the atomic power reactor in Tamil Nadu will become operational by next month, Prime Minister Manmohan Singh has said. He gave this assurance to Russian President Vladimir Putin when the two met here late last night on the sidelines of the BRICS summit.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X