• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In

பெண்களை கடத்தும் பெர்லுஸ்கோனி விளம்பரம்.. வாபஸ் பெற்றது ஃபோர்டு நிறுவனம்!

By Mayura Akilan
|

சென்னை: காரின் டிரைவர் சீட்டில் இத்தாலி நாட்டின் முன்னாள் அதிபர் சில்வியா பெர்லுஸ்கோனி. காரின் சீட்டில் மூன்று பெண்கள் அரை குறை ஆடை அணிந்து கை கால்கள் கட்டப்பட்டு வாய் மூடப்பட்ட நிலையில் இருக்கின்றனர். அதோடு டிரைவர் சீட்டில் அமர்ந்துள்ள பெர்லுஸ்கோனி வெற்றிச்சின்னத்தை காட்டியவாறு சிரித்துக் கொண்டிருக்கின்றார்.

இது தமிழ்நாட்டில் தயாராகும் போர்டு பிகோ கார் பற்றிய விளம்பரம். அதேபோல் சர்ச்சைக்குரிய மூன்று விளம்பரங்களை வெளியிட்டுள்ளது இந்த நிறுவனம். இந்த விளம்பரங்கள் இணையதளத்தில் வெளியாகியதில் இருந்து மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தின.

டெல்லியில் டிசம்பர் மாதம் கற்பழிப்புக் கும்பல் நடத்திய அராஜகத்தைத் தொடர்ந்து, மத்திய அரசு சென்ற வாரம் பெண்கள் பாதுகாப்பு குறித்து கடுமையான சட்டத் திருத்தங்களைக் கொண்டு வந்தது. சில நாட்களுக்குள்ளாகவே பெண்மையை இழிவுபடுத்தும் விதமாய் வெளிவந்த பிகோவின் விளம்பரங்கள் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகின.

பெர்லுஸ்கோனி லீலைகள்

பெர்லுஸ்கோனி லீலைகள்

பெர்லுஸ்கோனியின் காதல் லீலைகள் இத்தாலியர்களை விட மற்ற நாட்டவர்களுக்குத்தான் நிறையத் தெரியும். அந்த அளவுக்கு பெர்லுஸ்கோனியின் காம களியாட்டங்கள் குறித்த செய்திகள் வராத நாளில்லை. 75 வயதாகும் அவரால் ஒரு நாளைக்கு ஐந்து முறை உறவு கொள்ள முடியும் என்று மருத்துவர்கள் சான்றிதழ் அளித்துள்ளனர்.

சில்மிஷ நாயகன் பெர்லுஸ்கோனி

சில்மிஷ நாயகன் பெர்லுஸ்கோனி

இத்தாலி நாட்டின் அதிபராக இருந்தபோது பெர்லுஸ்கோனி மீது எக்கச்சக்க பாலியல் புகார்கள் உண்டு. 18 வயது பெண்ணில் ஆரம்பித்து 50 வயது பெண் வரை இவரிடம் சிக்கியுள்ளனர். இதைத் தான் போர்ட் தனது விளம்பரத்தில் கூறியிருந்தது.

பாரிஸ் ஹில்டன்- கிம் கார்டாஷியன்

பாரிஸ் ஹில்டன்- கிம் கார்டாஷியன்

மற்றொரு விளம்பரத்திலும் அமெரிக்க நடிகை பாரிஸ் ஹில்டன், டிரைவர் சீட்டில் அமர்ந்திருக்க அந் நாட்டு பிரபல மாடலான கிம் கர்டாஷியனும் அவரது 2 சகோதரிகளும் கட்டிப்போட்டிருப்பது போலவும் சித்தரிக்கப்பட்டிருக்கிறது.

மைக்கேல் சூமேக்கரும் தப்பவில்லை...

மைக்கேல் சூமேக்கரும் தப்பவில்லை...

இதே நிறுவனம் தனது மற்றொரு விளம்பரத்தில் பார்முலா 1 சாம்பியன் மைக்கேல் சூமேக்கர் தனது காரில் போட்டி டிரைவர்களான லிவிஸ் ஹேமில்டன், செபஸ்டியன் வெட்டல், பெர்னான்மோ அலோன்சோ ஆகியோரை கடத்திக் கொண்டு போவது போல சித்தரித்துள்ளது.

விளம்பரத்தை நீக்க சம்மதம்

விளம்பரத்தை நீக்க சம்மதம்

இந் நிலையில் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் உள்ள விளம்பரங்களை நீக்கவேண்டும் என்றும் மகளிர் அமைப்புகள் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து இந்த விளம்பரங்களை நீக்கிவிடுவதாக ஃபோர்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் ஃபிகோவில் உங்கள் அனைத்துக் கவலைகளையும் விடலாம் என்ற வாசகமும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியதால் அவை திரும்பப் பெறப்பட்டன.

மன்னிப்பு கேட்ட போர்டு

மன்னிப்பு கேட்ட போர்டு

இதற்கு கார் கம்பெனி மன்னிப்புக் கேட்டதுடன் இதுபோல் தவறுகள் இனி நடக்காது என்றும் கூறியுள்ளது. இவ்விளம்பரம், விளம்பரக் கம்பெனியின் கற்பனையில் உருவாக்கப்பட்டது என்று போர்டு தயாரிப்பு நிறுவனம் கூறியுள்ளது.

மற்ற விளம்பரங்கள் நீக்கப்படுமா?

மற்ற விளம்பரங்கள் நீக்கப்படுமா?

கார் விளம்பரம் மட்டுமல்லாது, குறிப்பிட்ட நிறுவனத்தின் உள்ளாடைகளை அணியும் ஆண்களைக் கண்டால் பெண்கள் மயங்கி பின்னால் செல்வது போலவும், வாசனை திரவியங்களை பயன்படுத்து ஆணின் மேல் பெண்கள் மயங்கி விழுவது போலவும் கற்பனையில் விளம்பரப்படுத்தப்படுகிறது. பெண்களை மயக்கவேண்டும் என்பதற்காக செய்யப்படும் இது போன்ற விளம்பரங்களை தடை செய்யவேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

English summary
A spokeswoman for the Indian subsidiary of Ford Motor Company said the ads were drawn up by an agency working for them and never used in a campaign, and have since been removed from the agency’s website.The ad showed three women bound and gagged in the trunk of a Ford Figo with the Italian former prime minister waving a victory sign over his shoulder from the driver’s seat. The tagline says “Leave your worries behind with Figo’s extra-large boot.”
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X