For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அடடே நீங்க 'ஓசி' பார்ட்டியா...? உங்களுக்காகவே ஒரு ஹோட்டல்!

Google Oneindia Tamil News

ஹெல்சிங்கி: 35 நாட்கள் 'ஓசி'யில் தங்க, தூங்க ஆள் தேடும் விசித்திர அழைப்பை பின்லாந்து ஹோட்டல் ஒன்று வெளியிட்டுள்ளது.

பின்லாந்து நாட்டின் தலைநகர் ஹெல்சிங்கி-யில் 'ஹோட்டல் பின்' என்ற பெயரில் ஆடம்பர தங்கும் விடுதி உள்ளது. இந்த ஹோட்டலில் இதுவரை பலமுறை மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. தற்போதும் கூட சிறிய அளவிலான பராமரிப்பு பணிகள் இங்கு நடைபெற்று வருகிறது.

இலவசமோ... இலவசம்

இலவசமோ... இலவசம்

தற்போது இந்த 'ஹோட்டல் பின்' -ல் 35 நாட்கள் இலவசமாக தங்கிக் கொள்ளலாம், வாருங்கள் என்று ஒரு வித்தியாசமான அழைப்பை விடுத்துள்ளனர்.

மாற்றம் ஒன்றே... மாறாதது.

மாற்றம் ஒன்றே... மாறாதது.

வாடிக்கையாளர் சவுகரியத்திற்காக அவ்வப்போது மாற்றங்களை செய்து கொண்டிருக்காமல், ஒட்டுமொத்த வசதிகளையும் இப்போதே மேம்படுத்தும் நோக்கத்தில் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறியுள்ளார் ஹோட்டலின் மேலாளர் டியோ டிக்கா

தங்கிட்டு அப்புறம் ‘பிளாக்’ல எழுதனும்...

தங்கிட்டு அப்புறம் ‘பிளாக்’ல எழுதனும்...

35 நாட்கள் இந்த ஹோட்டலில் இலவசமாக தங்கி, அங்குள்ள நிறை - குறைகளை பற்றி ஹோட்டலின் 'பிளாக்' கில் எழுத வேண்டுமாம், ஓசியில் தங்குபவர்கள். அதற்கான விண்ணப்பங்களை ஏப்ரல் மாத இறுதிக்குள் அனுப்ப வேண்டுமாம்.

தூங்க நாங்க ரெடி...

தூங்க நாங்க ரெடி...

நாட்டில் எத்தனை பேர் சும்மா இருக்கிறார்கள் என்பதை இந்த அறிவிப்பு வெளிக்காடியுள்ளது. அதாவது விளம்பரம் வெளியான சில நாட்களில் இதுவரை 600க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வரப்பெற்றதாகவும், அடுத்த மாதத்திற்குள் ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள் குவியக்கூடும் என நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஒரு எட்டு தூங்கிட்டு வரலாம்

ஒரு எட்டு தூங்கிட்டு வரலாம்

மே மாதம் 17ம் தேதியில் இருந்து (தூங்கும்) வேலையில் சேரலாம் என விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது. (பக்கத்துல இருந்தா நாமளும்கூட ஒரு எட்டு போய் தூங்கிட்டு வரலாம்)

English summary
Hotel Finn in the heart of Helsinki might just be the ticket - they're seeking a "professional sleeper" for 35 days to test their rooms and write all about it. Hotel manager Tio Tikka says he thought up the stunt to help promote the hotel after lengthy renovations.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X