For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ராணுவ 'வார் ரூம்' ரகசியங்கள் 'லீக்': இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும் ரவி சங்கரன்.. நடந்தது என்ன?

By Chakra
Google Oneindia Tamil News

லண்டன்: இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் மிக பாதுகாப்பான வார் ரூமில் இருந்து ராணுவம் தொடர்பான மிக மிக ரகசியமான ஆவணங்களை ஒரு வெளிநாட்டு ஆயுத காண்ட்ராக்டருக்கு கசிய விட முயன்ற, முன்னாள் கடற்படை கமாண்டரை இந்தியாவுக்குத் திருப்பி அனுப்ப இங்கிலாந்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

46 வயதான ரவி சங்கரன் என்ற முன்னாள் கடற்படை கமாண்டர், இந்திய கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் அருண் பிரகாஷின் உறவினர் ஆவார்.

விமானப் படையின் உளவுப் பிரிவு கண்டுபிடித்தது...

விமானப் படையின் உளவுப் பிரிவு கண்டுபிடித்தது...

இவர் 2006ம் ஆண்டு இந்திய ராணுவத்தின் ரகசிய ஆவணங்களை பாதுகாப்பு அமைச்சகத்தின் வார் ரூமில் இருந்து சுட்டு அதை வெளிநாட்டைச் சேர்ந்த ஒரு ஆயுத காண்ட்ராக்டருக்கு அனுப்ப முயன்றார். இதை விமானப் படையின் உளவுப் பிரிவு கண்டுபிடித்தையடுத்து இவர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. ஆனால், அந்த ஆண்டு மார்ச் மாதமே இவர் தப்பி லண்டனுக்குச் சென்றுவிட்டார்.

வழக்கு போட்டு தப்ப முயன்ற ரவி சங்கரன்...

வழக்கு போட்டு தப்ப முயன்ற ரவி சங்கரன்...

இவரை இந்தியாவுக்குக் கொண்டு வரும் நடவடிக்கைகளில் மத்திய அரசு இறங்கியது. ஆனால், தலைமறைவாகவும் நாடு விட்டு நாடு தப்பியும் வந்தார் ரவி சங்கரன். இங்கிலாந்து அரசுக்கு மத்திய அரசு கடும் நெருக்கடி தந்ததையடுத்து இவரை இந்தியாவிடம் ஒப்படைக்க அந்த நாடு முன் வந்தது.

இதை எதிர்த்து லண்டனின் மாவட்ட நீதிமன்றத்தில் ரவி சங்கரன் வழக்குத் தொடர்ந்தார். இதை விசாரித்த நீதிபதி நேற்று, சங்கரனின் மனுவை தள்ளுபடி செய்துவிட்டார். இதையடுத்து அவர் விரைவில் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படவுள்ளார்.

யார் இந்த ரவி சங்கரன்...

யார் இந்த ரவி சங்கரன்...

கடற்படையில் லெப்டினன்ட் பொறுப்பில் இருந்த கமாண்டரான ரவி சங்கரன், மிகச் சிறந்த ஆழ்கடல் ஆய்வாளர் ஆவார். முன்னாள் கடற்படைத் தளபதி அருண் பிரகாஷின் தங்கை மகனாவார். 1990களில் உடல் நிலையைக் காரணம் காட்டி கடற்படையில் இருந்து ஓய்வு பெற்ற இவர் ‘Shank Ocean Engineering' என்ற நிறுவனத்தை ஆரம்பித்தார். இந்த நிறுவனம் கடற்படைக்குத் தேவையான பொருட்களை சப்ளை செய்து வந்தது.

வார் ரூம் ஆவணம்..

வார் ரூம் ஆவணம்..

இந் நிலையில் வார் ரூமில் இருந்த கடற்படை தொடர்பான மிக மிக ரகசியமான ஆவணத்தை, இவர் திருடினார். அதை விமானப் படையைச் சேர்ந்த விங் கமாண்டர் எஸ்.எல்.சுர்வே என்பவரின் வீட்டில் வைத்து ஒரு ஆயுத காண்ட்ராக்டருக்கு தரத் திட்டமிட்டிருந்தார். ஆனால், இதை விமானப் படையின் உளவுப் பிரிவு கண்டுபிடித்து, அந்த ஆவணத்தை சுர்வேயின் வீட்டிலிருந்து மீட்டுவிட்டது.
இந்த ஆவணத்தில் இந்திய ராணுவத்தின் தயார் நிலை, ராணுவம் வாங்கியுள்ள ஆயுதங்கள் குறித்த விவரங்கள் இருந்தன.

தப்பியோடிய ரவி சங்கரன்..

தப்பியோடிய ரவி சங்கரன்..

இந்த ஆவணம் லீக் ஆனதில் முக்கிய சூத்ரதாரி ரவி சங்கரன் தான் என்று தெரியவந்ததையடுத்து அவரைப் பிடிக்க சிபிஐ முயன்றது. ஆனால், அதற்குள் அவர் நாட்டை விட்டுத் தப்பிவிட்டார் பிரானஸ், இத்தாலி, டென்மார்க், இங்கிலாந்து என நாடு விட்டு நாடு மாறிக் கொண்டே இருந்தார். இதையடுத்து சிபிஐ இன்டர்போலின் உதவியை நாடியது.

இன்டர்போலிடம் சிக்கினார்.

இன்டர்போலிடம் சிக்கினார்.

2010ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இன்டர்போல் இவரை லண்டனில் வைத்து சுற்றி வளைக்க இருந்த நிலையில், அதை அறிந்து அந் நாட்டு அரசிடம் சரணடைந்தார். இதையடுத்து இவரை இந்தியாவுக்கு அனுப்ப இங்கிலாந்து முயல, அதைத் தவிர்க்க வழக்குப் போட்டு இழுத்தடித்து வந்தார். இந்தியாவின் நெருக்குதலால் இங்கிலாந்து அரசு இந்த வழக்கில் தீவிரமான வாதங்களை முன் வைத்து வாதிட்டது. இந் நிலையில் அவரது மனு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அவரது பாஸ்போர்ட்டை முடக்கவும் உத்தரவிட்டுள்ளது.

இங்கிலாந்து உள்துறை அமைச்சர் அடுத்த முடிவெடுப்பார்..

இங்கிலாந்து உள்துறை அமைச்சர் அடுத்த முடிவெடுப்பார்..

நீதிமன்ற உத்தரவுப்படி ரவி சங்கரன் லண்டனில் ஒரே ஒரு விலாசத்தில் தான் தங்கியிருக்க வேண்டும். நாட்டை விட்டு வெளியே செல்லக் கூடாது. இப்போது ரவி சங்கரன் குறித்த பைல் இங்கிலாந்து உள்துறை அமைச்சர் தெரஸா மேவிடம் வந்துள்ளது. அவர் சங்கரனை இந்தியாவிடம் ஒப்படைப்பது குறித்து 2 மாதங்களுக்குள் முடிவெடுப்பார் என்று தெரிகிறது.

English summary
The prime accused in the Indian naval war leak case Ravi Shankaran could soon be on a plane back to India. The Westminster Magistrates Court in London on Wednesday cleared his extradition to India. The final decision on whether Shankaran will be extradited by UK will now be taken within the next two months by British home secretary Theresa May. The Court asked the Metropolitan Police to confiscate Shankaran's passport. He has now been banned from international travel and will have to live in a single address. He was, however, granted bail against 20,000 pounds.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X