For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உடனே ரூ. 2000 கோடியை கட்டுங்க.. நோக்கியா நிறுவனத்துக்கு ஐடி உத்தரவு

Google Oneindia Tamil News

Nokia
டெல்லி: பின்லாந்து நாட்டைச் சேர்ந்த நோக்கியா செல்போன் நிறுவனத்திற்கு வருமான வரித்துறை ரூ. 2000 கோடி வரி பாக்கியை உடனடியாக கட்டுமாறு கூறி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இருப்பினும் இந்த உத்தரவுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து விட்டது.

கடந்த ஜனவரி மாதம், நோக்கியா நிறுவனம் மீதான ரூ. 3000 கோடி வரி ஏய்ப்பு புகார் குறித்த விசாரணையை வருமான வரித்துறை விசாரணைக்கு எடுத்தது. இதையடுத்து நோக்கியாநிறுவனத்தில் ரெய்டுகளும் நடத்தப்பட்டன. தீவிர விசாரணைக்குப் பின்னர் ரூ. 2080 கோடி வரி ஏய்ப்பில் நோக்கியா ஈடுபட்டுள்ளதாக வருமான வரித்துறை அறிவித்தது.

இதைத் தொடர்ந்து வரி ஏய்ப்பு செய்யப்பட்ட பணத்தை உடனடியாக கட்டுமாறு வருமான வரித்துறை தற்போது நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இருப்பினும் இதை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் நோக்கியா சார்பில் மனு செய்யப்பட்டது. அதை விசாரித்த உயர்நீதிமன்றம், இந்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

English summary
Nokia said on Thursday that Indian tax officials had issued the Finnish mobile phone maker with a fine although the Delhi High Court issued a stay on the demand. Nokia did not comment on the amount. In January, a senior Indian tax official said there was an investigation related to allegations that the firm may have evaded around Rs 3,000 crore in taxes.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X