For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அதிமுகவுக்கு தாவுகிறாரா புதிய தமிழகம் எம்.எல்.ஏ ராமசாமி?

By Mathi
Google Oneindia Tamil News

Puthiya Thamizhagam MLA joins ADMK?
சென்னை: தேமுதிக எம்.எல்.ஏக்களைத் தொடர்ந்து புதிய தமிழகம் கட்சியின் எம்.எல்.ஏ நிலக்கோட்டை ராமசாமி அதிமுகவில் ஐக்கியமாகப் போவதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன. ஆனால் எம்.எல்.ஏ. ராமசாமி இதனை மறுத்துள்ளார்.

தே.மு.தி.க.வின் மைக்கேல் ராயப்பன், தமிழழகன், சுந்தரராஜன் உள்பட 5 பேர் அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் புதிய தமிழகம் கட்சியின் நிலக்கோட்டை தொகுதி எம்.எல்.ஏ ராமசாமியும் அதிமுகவில் சேரப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

புதிய தமிழகம் கட்சிக்கு 2 எம்.எல்.ஏக்கள் இருக்கின்றனர். ஒருவர் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி. மற்றொருவர் நிலக்கோட்டை ராமசாமி. டாக்டர் கிருஷ்ணசாமி அதிமுவுடன் கூட்டணி சேர்ந்து சட்டசபை தேர்தலை சந்தித்த போதும் தேர்தலுக்குப் பின்னர் அதிமுகவுக்கு எதிராகவே செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில் அதிமுகவில் நிலக்கோட்டை எம்.எல்.ஏ ராமசாமி ஐக்கியமாகப் போவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இதை மறுத்துள்ள ராமசாமி, நானும் எங்கள் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியும் நெருக்கமாகவே இருக்கிறோம். எங்களுக்குள் எந்த கருத்து வேறுபாடும் கிடையாது. நேற்று இரவு கூட ஒன்றாகவே பேசிக் கொண்டிருந்தோம். எங்களுக்குள் எந்த பிரச்சினையும் இல்லை. யாரோ வதந்தியை பரப்பி உள்ளார்கள். என்னை பொறுத்தவரை கட்சி பணியையும், தொகுதி பணியையும் சிறப்பாக செய்து வருகிறேன் என்று கூறியுள்ளார்.

லோக்சபா தேர்தலுக்குள் எத்தனை அரசியல் நாடகங்கள் நடக்குமோ?

English summary
Puthiya Thamizhagam MLA Nilakkottai Ramasamy will join ADMK camp, sources said. But MLA Ramasamy denied these reports.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X