For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

’நான் மலாலா’: சிறுமி மலாலாவின் வாழ்க்கை வரலாறு ரூ.16 கோடிக்கு ஒப்பந்தம்

Google Oneindia Tamil News

Malala
லண்டன்: தலிபான்களால் சுடப்பட்டு, உயிர்பிழைத்த சிறுமி மலாலாவின் வாழ்க்கை வரலாறு, புத்தகமாக வெளியிடப்பட உள்ளது. இதற்காக, மலாலாவிடம் 16 கோடி ரூபாய்க்கு, ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

பெண்கள் கல்வி உரிமைக்காக போராடிய பாகிஸ்தான் சிறுமியான மலாலா, கடந்த, 2009ல், அந்நாட்டின் ஸ்வாட் பள்ளத்தாக்கு பகுதி வாழ்க்கை மற்றும் தலிபான்களின் அடக்குமுறை பற்றி, உருது மொழியில், பி.பி.சி.,யின் இணையதளத்தில், கட்டுரை எழுதினாள்.

புனைப்பெயரில் அவள் எழுதிய கட்டுரை பிரபலமடைந்ததை அடுத்து, மலாலாவின் அடையாளத்தை தெரிந்து கொண்ட தலிபான்கள், கடந்த அக்டோபர் மாதம், துப்பாக்கியால் சுட்டனர்.படுகாயமடைந்த மலாலா, பிரிட்டன் மருத்துவமனையில், சிகிச்சை பெற்றாள். பின் பூரண சுகமடைந்து, தற்போது, பிரிட்டனில் உள்ள பள்ளியில் தனது பள்ளி படிப்பை தொடர்கிறாள்

மலாலாவின் போரட்ட வாழ்க்கையை, புத்தகமாக வெளியிட, பிரிட்டனை சேர்ந்த, "வீடன்பெல்ட் அண்ட் நிக்கல்சன்' என்ற, நிறுவனம் முன்வந்துள்ளது. இதற்காக, 16 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது."நான் மலாலா' என, பெயரிடப்பட்டு உள்ள இப்புத்தகம், பிரிட்டனின் மற்றொரு பதிப்பகமான லிட்டில் பிரவுன் மூலம், உலகமெங்கும் வெளியிடப்படுமாம்.

English summary
Malala Yousafzai, the teenage girl shot by the Taliban for promoting girls' education, is to tell her life story in a book due out later this year, the publishers said on Thursday, in a deal reportedly worth around $3 million. The book will be entitled "I Am Malala".
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X