For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஒரு உடல், இரண்டு தலை சுறாமீன்: ஒட்டிப்பிறந்த ’மாற்றான்’ மீனா?

Google Oneindia Tamil News

புளோரிடா: அமெரிக்காவில் இரட்டைத்தலை சுறாமீன், ஒட்டிப்பிறந்த இரட்டை மீன் என கண்டுபிடிக்கப்பட்டது

ஒரு உடல் இரு தலைகளுடன் சிலர் அபூர்வமான பிறப்பதை திரைப்படக்களில் பார்த்திருக்கிறோம், நிஜத்திலும் கேள்விப்பட்டிருக்கிறோம். இரட்டை தலை கொண்ட பாம்புகள் கூட இருக்கின்றன.

இந்த வகையில் இரட்டை தலை கொண்ட சுறா மீன் ஒன்று முதல் முறையாக அமெரிக்காவில் இருப்பது உறுதியாகி இருக்கிறது. கடலில் சிக்கிய இந்த அதிசய சூறாமீனை புளோரிடாவிலுள்ள கல்லூரி ஒன்றுக்கு ஆய்வு செய்ய கொண்டு வரப்பட்டது.

அங்கு போதுமான ஆய்வு நடத்த வசதிகள் இல்லாததால், சுறாமீன் தீவிர ஆய்வு நடத்தப்படுவதற்காக மிஷிகனிலுள்ள கடல் உயிரின ஆய்வு பல்கலைக்கழகத்துக்கு வந்து சேர்ந்தது. பேராசிரியர் வாக்னெர் தலைமையில் விஞ்ஞானிகள் இந்த சூறாமீனை ஆய்வு செய்ததில் அது ஒட்டிப்பிறந்த இரட்டை மீன் என்பதை கண்டுபிடித்தார்கள்.

இந்த சூறாமீனுக்கு 2 தலைகள் மட்டுமின்றி 2 இருதயம், 2 குடல் பகுதியும், ஒரு வால் ஆகியவை இருப்பதை கண்டுபிடித்துள்ளனர்..

English summary
A fisherman in the Florida Keys discovered a live bull shark fetus with two heads, something that scientists had never seen before in that species.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X