For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பின்லேடனை முதலில் சுட்டது யார்? என்பதில் குழப்பம்!

By Mathi
Google Oneindia Tamil News

Bin laden
வாஷிங்டன்: அல்கொய்தா இயக்கத்தின் தலைவர் ஒசாமா பின்லேடனை அமெரிக்காவின் சிறப்பு அதிரடிப்படையில் யார் முதலில் சுட்டுக் கொன்றது என்பதில் குழப்பம் நிலவி வருகிறது.

பாகிஸ்தானின் அபோதாபாத் நகரில் பதுங்கியிருந்த பின்லேடனைகடந்த 2011-ம் ஆண்டு மே 2-ந் தேதியன்று நேவிசீல் என்ற அமெரிக்காவின் சிறப்பு அதிரடிப்படை சுட்டுக் கொலைசெய்தது.

தற்போது அமெரிக்க ஊடகம் ஒன்றுக்கு நேவிசீல் அதிரடிப்படையில் இருந்த வீரர் ஒருவர் அளித்த பேட்டியில், அதில் பின்லேடனை 2 முறை தாம் தலையில் சுட்டுக் கொன்றேன் என கூறியுள்ளார்.கொன்றதாகக் கூறியுள்ளார். ஆனால் மற்றொரு வீரரோ பின்லேடன் பதுங்கியிருந்த 3-வது மாடிக்கு தாம் மட்டும் தனியாக சென்று சுட்டுக் கொன்றதாகக் கூறியுள்ளார்.

இந்த இருவரும் கூறியிருப்பதை மூத்த அரசியல் விமர்சகர் பீட்டர் பெர்லகன் மறுத்திருக்கிறார். இதுபற்றி அவர் கூறுகையில், 6 பேர் கொண்ட அமெரிக்க அதிரடிப்படையில் 3 பேர் மட்டும் பின்லேடன் தங்கியிருந்த வீட்டின் மேல் தளத்துக்கு சென்றனர். அவர்களில் பாய்ண்ட் மேன்தான் பின்லேடனை முதலில் சுட்டார். அவர் பின்லேடன் பதுங்கியிருந்த அறைக்கு சென்ற போது 2 பெண்கள் அவரை வழி மறுத்து தாங்கள் இருவரும் தற்கொலை படையினர் என்றும் உடலில் வெடிகுண்டை கட்டியிருப்பதாகவும் மிரட்டினர். அதற்குள் பாயின்ட்மேன் உள்ளிட்ட இருவர் பின்லேடன் அறைக்குள் புகுந்து அவரது மார்பில் சுட்டு கொன்று வீழ்த்தினர் என்றார்.

பின்லேடனை யார் முதலில் சுட்டது என்பதில் தொடர்கிறது குழப்பம்!

English summary
A new version of the events surrounding the killing of Osama bin Laden was unveiled sharply contradicting earlier claims by a Navy SEAL who said he pulled the trigger.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X