For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கொலைகார இத்தாலி மாலுமிகள் மீதான வழக்கு தேசிய புலனாய்வு அமைப்பிடம் ஒப்படைப்பு!

By Mathi
Google Oneindia Tamil News

NIA
டெல்லி: கேரள கடற்பரப்பில் 2 மீனவர்களை படுகொலை செய்த இத்தாலி மாலுமிகள் இருவர் மீதான வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பிடம் ஒப்படைத்திருப்பதாக உள்துறை அமைச்சகம் அறிவித்திருக்கிறது.

கேரள கடற்பரப்பில் மீனவர்கள் இருவரை இத்தாலியின் என்ரிகாலெக்ஸி கப்பலில் இருந்த 2 மாலுமிகள் சுட்டுப் படுகொலை செய்தனர். இந்த வழக்கை கேரள காவல்துறை விசாரித்து வந்தது. அண்மையில் பொதுத்தேர்தலில் வாக்களிப்பதற்காக தங்கள் நாட்டுக்கு சென்ற மாலுமிகள் இருவரையும் திருப்பி அனுப்ப முடியாது என்று இத்தாலி அறிவித்தது.

இதனால் இந்தியா- இத்தாலி உறவில் விரிசல் ஏற்பட்டது. மேலும் இந்தியாவுக்கான இத்தாலி தூதர் நாட்டை விட்டு வெளியேறவும் உச்சநீதிமன்றம் தடை விதித்தது. இதனால் விஸ்வரூபமெடுத்த விவகாரத்துக்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் இரண்டு மாலுமிகளும் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விவகாரத்தில் இத்தாலி வெளிவிவகார அமைச்சர் ராஜினாமா செய்யவும் நேரிட்டது.

இந்நிலையில் கேரள போலீசார் விசாரிப்பதைவிட தேசிய புலனாய்வு அமைப்பு இந்த வழக்கை விசாரிப்பது சரியாக இருக்குமா?என்று சட்ட வல்லுநர்களுடன் மத்திய அரசு ஆலோசித்தது. இதைத் தொடர்ந்து இன்று இந்த வழக்கு தேசிய புலனாய்வு அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

English summary
The Ministry of Home Affairs on Monday handed over the case relating to the two Italian marines to the National Investigation Agency (NIA).
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X