For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஏப்ரல் பிறந்த கையோடு விலை உயர்ந்த 13 பொருட்கள்

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: ஏப்ரல் 1ம் தேதி முதல் செல்போன், வெளிநாட்டு கார், பைக், சிகரெட் உள்ளிட்டவற்றின் விலை உயர்ந்துள்ளன.

2013-2014ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் கடந்த பிப்ரவரி மாதம் 28ம் தேதி தாக்கல் செய்தபோது சில பொருட்கள் மீதான வரியை உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டார். இந்த புதிய வரி விதிப்பு ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று அவர் தெரிவித்திருந்தார்.

அவர் கூறிய ஏப்ரல் 1ம் தேதி நேற்று தான். நேற்று முதல் விலை உயர்ந்த பொருட்களின் பட்டியல் இதோ...

செல்போன்கள்

செல்போன்கள்

ரூ. 2,000க்கு மேல் மதிப்புள்ள செல்போன்கள் மீதான வரி 6 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதையடுத்து இனி செல்போன்கள் விலை அதிகமாகத் தான் இருக்கும்.

கையை சுடும் சிகரெட் விலை

கையை சுடும் சிகரெட் விலை

சிகரெட் மீதான வரி 18 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. விலை உயர்ந்தாலும் சிகரெட் வாங்குபவர்களின் எண்ணிக்கை மட்டும் குறைந்தபாடில்லை.

எஸ்யூவி கார்கள்

எஸ்யூவி கார்கள்

எஸ்யூவி கார்கள் மீதான வரி 20 சதவீதத்தில் இருந்து 30 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதனால் இனி எஸ்.யூ.வியும் காஸ்ட்லி தான்.

வெளிநாட்டு பைக், கார்கள்

வெளிநாட்டு பைக், கார்கள்

வெளிநாட்டு கார்கள், பைக்குகள் மீதான இறக்குமதி வரி 75 சதவீதத்தில் இருந்து 100 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் எக்ஸ்ட்ரா பணம் கொடுத்து வாங்க தயாராகுங்கள்.

மார்பிள்

மார்பிள்

மார்பிள் மீதான வரி சதுர மீட்டருக்கு 30 ரூபாயில் இருந்து 60 ரூபாயாக அதிகரிப்பட்டுள்ளது. அதனால் மார்பிள் பதிக்க விரும்புவர்கள் கூடுதலாக செலவளிக்க வேண்டும்.

செட்டாப் பாக்ஸ்

செட்டாப் பாக்ஸ்

செயற்கைக் கோள் தொலைக்காட்சிகள், கேபிள் தொலைக்காட்சிகளைப் பார்க்க முக்கிய சாதனமான செட்டாப் பாக்ஸுகளுக்கான இறக்குமதி வரி உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் ரூ.1,200க்கு விற்ற செட்டாப் பாக்ஸின் விலை ரூ.2,200 வரை அதிகரித்துள்ளது.

கார், பைக் இன்சூரன்ஸ்

கார், பைக் இன்சூரன்ஸ்

கார் மற்றும் பைக்கிற்கான காப்பீடு 20 சதவீதம் காஸ்ட்லியாகி உள்ளது.

ஏசி ஹோட்டல் சாப்பாடு

ஏசி ஹோட்டல் சாப்பாடு

அனைத்து ஏசி ஹோட்டல்களுக்கும் 12 சதவீத சேவை வரி விதிக்கப்பட்டுள்ளது. அதனால் இனி ஏசி ஹோட்டல்களில் சாப்பிட்டால் வாட் வரி பிளஸ் சேவை வரி என்று கூடுதல் பணம் கொடுக்க வேண்டும்.

சிஎன்ஜி

சிஎன்ஜி

ஆட்டோக்களில் பயன்படுத்தப்படும் சிஎன்ஜி எனப்படும் கேஸ் விலையும் உயர்ந்துள்ளது.

பட்டும் இனி காஸ்ட்லியே

பட்டும் இனி காஸ்ட்லியே

பெண்கள் விரும்பி அணியும் பட்டுப் புடவையின் விலையும் அதிகரித்துள்ளது.

சொகுசு வீடுகள்

சொகுசு வீடுகள்

சொகுசு வீடுகள் வாங்குவோர் கூடுதல் தொகையை கொடுக்க வேண்டி இருக்கும்.

ரயில் கட்டணம்

ரயில் கட்டணம்

ரயில் பயணிகள் கட்டணம் மற்றும் சரக்கு கட்டணம் உயர்ந்துள்ளது. தட்கல் கட்டணம், முன்பதிவு கட்டணம் உள்ளிட்டவை உயர்ந்துள்ளது. மேலும் டிக்கெட் ரத்துக்கான பிடித்த விகிதமும் உயர்ந்துள்ளது.

டெல்லி நொய்டா நெடுஞ்சாலை சுங்க வரி

டெல்லி நொய்டா நெடுஞ்சாலை சுங்க வரி

டெல்லி நொய்டா நெடுஞ்சாலையில் செல்பவர்களிடம் வசூலிக்கப்படும் சுங்க வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. அதனால் கார்கள் ரூ.25ம் (ரூ.3 உயர்வு), இரண்டு சக்கர வாகனங்கள் ரூ.12ம்(ரூ.1 உயர்வு) செலுத்த வேண்டும்.

English summary
13 things including train fare, SUVs, imported bikes, car and bike insurance, luxury houses cost more from april 1.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X