For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாபர் மசூதி.. அத்வானிக்கு எதிராக ஏன் இன்னும் அப்பீல் செய்யவில்லை.. அரசுக்கு சுப்ரீம் கோர்ட் சூடு

Google Oneindia Tamil News

Advani
டெல்லி: பாபர் மசூதி இடிப்பு வழக்கிலிருந்து பாஜக மூத்த தலைவர் அத்வானி உள்ளிட்டோரை விடுவித்து அலகாபாத் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து ஏன் இன்னும் அப்பீல் செய்யாமல் தாமதம் செய்து வருகிறீர்கள் என்று மத்திய அரசுக்கும், சிபிஐக்கும் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

இதுதொடர்பாக உடனடியாக உரிய ஆவணங்களைத் தாக்கல் செய்யுமாறும் மத்திய அரசின் அட்டர்னி ஜெனரலுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பான வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு மற்றும் சிபிஐயின் போக்கு குறித்து பெஞ்ச் அதிருப்தி தெரிவித்தது.

அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்வதில் என்ன சிக்கல், ஏன் இத்தனை தாமதம் என்பதை விளக்குமாறு சிபிஐக்கும் உச்சநீதி்மன்றம் உத்தரவிட்டது.

மேலும் இந்த வழக்கு தொடர்பாக அத்வானி உள்ளிட்டோர் தேசிய குற்றம் இழைத்து விட்டதாக சிபிஐ தனது அறிக்கையில் தெரிவித்ததற்கும் உச்சநீதி்மன்றம் கண்டனம் தெரிவித்தது. வழக்கு முடிந்து தீர்ப்பு வெளியாகும் வரை இதுபோன்ற வார்த்தைகளை சிபிஐ பயன்படுத்தக் கூடாது என்றும் கோர்ட் கண்டித்தது.

இதுகுறித்து நீதிபதி எச்.எல்.தத்து கூறுகையில், நாங்கள் இந்த வழக்கில் முடிவுக்கு வரும் வரை தேசிய குற்றம், தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது போன்ற வார்த்தைகளை சிபிஐ பயன்படுத்தக் கூடாது. தீர்ப்பு வரும்வரை இப்படிப்பட்ட தீர்மானமான வார்த்தைகளை தவிர்க்க வேண்டும் என்றார்.

அத்வானி தவிர சதீஷ் பிரதான், அசோக் சிங்கால், கிரிராஜ் கிஷோர், சிஆர்பன்சால், சாத்வி ரிதம்பரா, வி.எச்.டால்மியா, மஹந்த் அவத்யநாத், வேதாந்தி, பரம் ஹன்ஸ் ராம் சந்திர தாஸ், ஜெகதீஷ் முனி மஹராஜ், நிருத்ய கோபால் தாஸ், தரம் தாஸ், சதீஷ் நகர் உள்ளிட்டோரும் இந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
The Supreme Court on Tuesday questioned the Centre and the Central Bureau of Investigation (CBI) for delay in filing appeal against BJP veteran LK Advani and others accused in Babri Masjid demolition case. According to reports, the apex court also sought an affidavit from senior law officer of Centre explaining the delay in filing appeal against the high-profile accused. The apex court also asked the CBI to explain the delay in challenging Allahabad High Court's ruling that conspiracy charges will not apply to Advani and others.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X