For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5%.ஆக குறைவு: பிரதமர் மன்மோகன்சிங் கவலை

By Mathi
Google Oneindia Tamil News

Manmohan Singh
டெல்லி: நாட்டின் பொருளாதார வளர்ச்சியானது 5%ஆக குறைந்து வருவது குறித்து பிரதமர் மன்மோகன்சிங் கவலை தெரிவித்துள்ளார்.

டெல்லியில் இந்திய தொழில் கூட்டமைப்பின் ஆண்டு பொதுக் கூட்டத்தில் இன்று பேசிய பிரதமர் மன்மோகன்சிங், 5%பொருளாதார வளர்ச்சி என்பது கவலை தரக் கூடியது. இது நமக்கு ஒரு தற்காலிக பின்னடைவுதான். சர்வதேச பொருளாதார மந்த நிலையும் இதற்கு காரணம். விரைவில் 8% பொருளாதார வளர்ச்சியை அடைவோம்.

நேரடிய அன்னிய முதலீட்டு கொள்கையில் இறுக்கங்களை இன்னமும் தளர்த்த உள்ளோம். இதேபோல் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.ஊழல் விவகாரங்கள், அதிகாரத் தலையீடுகள், கூட்டணி கட்சிகளின் நெருக்கடி என பல்வேறு சிக்கல்களை நாம் எதிர்கொண்டிருந்தாலும் இந்தியாவால் 8% பொருளாதார வளர்ச்சியை எட்ட முடியும்.

அனைத்து பொருளாதார பிரச்சனைகளையும் இந்த நிதியாண்டில் சீராக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உலக பொருளாதாரம் வளர்ச்சியடையும் வரை நாமும் பொறுமையாக இருக்க வேண்டும்.நாட்டின் வளர்ச்சி என்பது அனைத்துத் துறைகளையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். தொழிற்சாலைகள் இன்றி நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி அடைய முடியாது என்றார்.

English summary
Terming the 5 per cent GDP expansion as clearly disappointing, Prime Minister Manmohan Singh on Wednesday made a case for speedy and decisive actions to achieve 8 per cent economic growth.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X