For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காஞ்சி, கோவை, ஈரோடு, சேலம், திண்டுக்கல், திருச்சியிலும்...

By Chakra
Google Oneindia Tamil News

J Jayalalitha
இவை மட்டுமல்லாமல், சென்னை, காஞ்சிபுரம், கோயம்புத்தூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம், விருதுநகர், திண்டுக்கல் மற்றும் திருச்சி ஆகிய 9 மாவட்டங்களில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான நிலத்தில் 1,630 தனி வீடுகள் மற்றும் 2,792 அடுக்குமாடி குடியிருப்புகள் சுமார் 918 கோடியே 45 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சுயநிதி திட்டத்தின் கீழ் கட்டப்படும் என்பதையும், மேலும் 32 மனைகள் மேம்படுத்தப்பட உள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் இந்த மாமன்றத்திற்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள 7 இடங்களில் 13.80 ஏக்கர் நிலத்தில்,
844 அடுக்குமாடி குடியிருப்புகள் 371 கோடியே 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் காஞ்சிபுரத்தில், இரண்டு இடங்களில் 22.70 ஏக்கர் நிலத்தில் 1500 அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் 32 மேம்படுத்தப்படும் மனைகள் 303 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும்,

கோயம்புத்தூர் மாவட்டத்தில் இரண்டு இடங்களில் 3.90 ஏக்கர் நிலத்தில் 344 அடுக்குமாடி குடியிருப்புகள் 50 கோடியே 16 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், ஈரோடு மாவட்டத்தில், 2 இடங்களில் 12.15 ஏக்கர் நிலத்தில் 468 அடுக்குமாடி குடியிருப்புகள் 59 கோடியே 27 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும்,

சேலம் மாவட்டத்தில் 36.20 ஏக்கர் நிலத்தில் 120 வீடுகள் 13 கோடியே 27 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 10.50 ஏக்கர் நிலத்தில் 258 அடுக்குமாடி குடியிருப்புகள் 19 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், விருதுநகர் மாவட்டத்தில் 3 இடங்களில் 32.50 ஏக்கர் நிலத்தில் 722 வீடுகள் 73 கோடியே 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் திண்டுக்கல் மாவட்டத்தில், இரண்டு இடங்களில் 1.03 ஏக்கர் நிலத்தில் 35 வீடுகள் 2 கோடியே 68 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும்,

மற்றும் திருச்சி மாவட்டத்தில் 2 இடங்களில் 3.09 ஏக்கர் நிலத்தில் 104 அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் 27 வீடுகள், 25 கோடியே 92 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், ஆக மொத்தம் 4,454 அலகுகள், நடப்பு ஆண்டில் எடுத்துக் கொள்ளப்பட்டு 24 மாதங்களில் முடிக்கப்படும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X