For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ராணி எலிசபெத் செலவுக்கு ரூ.296 கோடி ஒதுக்கீடு: ரூ. 42 கோடி ஜாஸ்தி!

Google Oneindia Tamil News

Queen Elizabeth II gets 5 million pounds pay hike!
இங்கிலாந்து: இங்கிலாந்தில் ராணி இரண்டாம் எலிசபெத்தின் செலவினங்களுக்காக 2013,14ம் நிதியாண்டுக்கு ரூ.296 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் ரூ. 42 கோடி அதிகம்.

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்துக்கு 86 வயதாகிறது. அந்நாட்டில் அரசு குடும்பத்துக்கு சொந்தமாக ஏராளமான சொத்துகள் உள்ளன. இவற்றை அந்நாட்டு அரசு பராமரித்து வருகிறது. அரண்மனைகள் மட்டும் ராணியிடம் உள்ளது.

மொத்த மதிப்பு:

அரசின் பொறுப்பில் உள்ள சொத்துக்களின் மதிப்பு மட்டும் ரூ.65,600 கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

ராஜ குடும்ப ‘செலவு':

ராஜ குடும்பத்தின் செலவுகளுக்காக, இங்கிலாந்து அரசு ஆண்டுதோறும் கோடிக்கணக்கான ரூபாய் ஒதுக்கீடு செய்து வந்தது.

லாபத்துல 15%...

புதிய ஏற்பாட்டின்படி, ராஜ குடும்பத்தின் சொத்துக்கள் மூலம் கிடைக்கும் லாபத்தில் இருந்து 15 சதவீதம் அளவுக்கு ஆண்டுதோறும் சம்பளமாக ராணிக்கு கொடுப்பது என்று தீர்மானிக்கப்பட்டது.

ராணிக்கு சம்பளம்...

கடந்த ஆண்டு சுமார் 10 சதவீதம் அளவுக்கு ராணியின் சம்பளமாக அளிக்கப்பட்டது. அதாவது ரூ.254 கோடி அளிக்கப்பட்டது. இந்த ஆண்டில் இதில் இருந்து ரூ.42 கோடி உயர்த்தப்பட்டு ரூ.296 கோடி அளிக்கப்பட்டுள்ளது.

பயணச்செலவு...

அரசு ஒதுக்கும் இந்த தொகையில்தான், ராணி மற்றும் அவரது குடும்பத்தினரின் வெளிநாட்டு பயணங்களுக்கான செலவுகள், 300 ஊழியர்களின் சம்பளம், அரண்மனை பராமரிப்பு செலவு ஆகியவை மேற்கொள்ளப்படுகிறது.

வயசாயிடுச்சு...

ராணிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு வருவதால், அவரது பொறுப்புகளை இளவரசர் வில்லியம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று இங்கிலாந்தில் பெரும்பாலானவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

English summary
The 86-year-old Queen received 31 million pounds last year, but that will be increased to 36.1 million pounds in 2013-2014 financial year.Under the new arrangement, the Queen receives a grant equal to 15 per cent of the profits from the Crown Estate, calculated two years in arrears.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X