For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கெய்ல் பாட.. கூடவே கோஹ்லி, முரளி, ஜாகீரும் ஆடிப் பாட.. ஊ ல ல ல லி யோ!

பெங்களூர்: ஐபிஎல் என்றாலே சித்திரை மாத அம்மன் கோவில் திருவிழா போல இந்தியாவில் களை கட்டி விடுகிறது. ஆட்டம் ஒரு பக்கம், பாட்டம், களேபர விருந்துகள் என மறுபக்கம் களை கட்டிக் காணப்படுகிறது.

பெங்களூரில் நடந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், மும்பை இந்தியன்ஸ் இடையிலான போட்டிக்கு முன்னதாக ஒரு வர்த்தக விளம்பரத்திற்கான படப்பிடிப்பில் ராயல் சேலஞ்சர்ஸ் வீரர்கள் சிலர் கலந்து கொண்டு ஆடிப் பாடினர்.

பெங்களூர் கேப்டன் கோஹ்லி, அதிரடி வீரர் கெய்ல், டேணியல் வெட்டோரி, முத்தையா முரளீதரன், ஜாகிர் கான் ஆகியோர் இந்த விளம்பரத்தில் நடித்தனர். அனைவரும் கெய்லுடன் சேர்ந்து ஊ ல ல ல லியோ என்று பாடி நடித்தனர்.

இந்தப் புத்தம் புதிய விளம்பரம் இந்த தொடர் முழுவதும் ஒளிபரப்பாகும். கிங்பிஷரின் இந்த விளம்பரத்தில் 6 ஐபிஎல் அணிகளின் வீரர்கள் கலந்து கொண்டு பாடி நடித்துள்ளனர்.

பிரமாதப்படுத்திய பெங்களூர்

பிரமாதப்படுத்திய பெங்களூர்

நேற்று நடந்த பெங்களூர், மும்பை இந்தியன்ஸ் இடையிலான ஆட்டத்தின்போதுகெய்லின் ஆட்டம்தான் அபாரமாக இருந்தது. 58 பந்துகளில் 92 ரன்களை அவர் விளாசினார்.

கடைசி ஓவரில் கிடுகிடுத்த வினய்

கடைசி ஓவரில் கிடுகிடுத்த வினய்

கடைசி ஓவரின்போது மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெறுவற்கு 10 ரன்கள் தேவை என்ற நிலையில் இருந்தது. அப்போது பந்து வீசியவர் வினய் குமார். அவரது முதல் பந்தில் அம்பட்டி ராயுடு ஆட்டமிழந்தார். அடுத்து திணேஷ் கார்த்திக் வீழ்ந்தார். 3வது பந்தில் ராயுடு வீழ்ந்தார்.

8 ரன் மட்டும் கிடைச்சிருந்தா...

8 ரன் மட்டும் கிடைச்சிருந்தா...

கடைசி 2 பந்துகளில் 8 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை. ஆனால் அதில் தவறிப் போயினர் பெங்களூர் அணியினர்.

வரலாற்றிலேயே முதல் முறையாக

வரலாற்றிலேயே முதல் முறையாக

ரிக்கி பான்டிங்கும், சச்சினும் நேற்றைய போட்டியில் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.இருவரும் இணைந்து தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கியது ஐபிஎல் வரலாற்றிலேயே இதுதான் முதல் முறையாகும். சிறப்பாகவும் ஆடினர். இருவரும் இணைந்து 52 ரன்களைச் சேர்த்தனர்.

எப்படி இருந்த பெங்களூர்

எப்படி இருந்த பெங்களூர்

பெங்களூர் அணி ஒரு கட்டத்தில் 12.4 ஓவரின்போது 5 விக்கெட்கள் இழப்புக்கு 80 ரன்களுடன் தவித்தது. ஆனால் கெய்ல்தான் புயல் வேகத்தில் ஆடி ரன் குவிப்பை துரிதப்படுத்தினார்.

காயமே அது பொய்யடா...

காயமே அது பொய்யடா...

இத்தனைக்கும் கெய்ல் காலில் காயத்துடன் ஆடினார். என்பது குறிப்பிடத்தக்கது. இருந்தாலும் வலியைப் பொறுத்துக் கொண்டு அதை பந்தை அடிப்பதில் காட்டினார்.

மும்பை தரப்பில் பொளந்து கட்டிய ஜஸ்பிரீத்

மும்பை தரப்பில் பொளந்து கட்டிய ஜஸ்பிரீத்

மும்பை இந்தியன்ஸ் அணியின் அறி்முக பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா பந்து வீச்சில் கலக்கினார்.32 ரன்களைக் கொடுத்த அவர் 3 விக்கெட்களைச் சாய்த்தார்.

ஜாகிர் கான் ஆடவில்லை

ஜாகிர் கான் ஆடவில்லை

காயம் காரணமாக ஜாகிர்கான் நேற்றைய போட்டியில் ஆட முடியாமல் போய் விட்டது.

Story first published: Friday, April 5, 2013, 18:20 [IST]
Other articles published on Apr 5, 2013
English summary
It was a thriller at M Chinnaswamy Stadium on Thursday night (April 4). And the home team Royal Challengers Bangalore (RCB) held their nerve to clinch a two-run win over Mumbai Indians in a last-ball finish of the second match of IPL 2013. Here are the highlights of this thrilling affair.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X