For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ராஜ்நாத் சிங், சுஷ்மா, அருண் ஜேட்லி பெங்களூர் சென்ற தனி விமானம் டெல்லியில் அவசரமாக தரையிறக்கம்

By Chakra
Google Oneindia Tamil News

டெல்லி: பாஜக தலைவர்களான ராஜ்நாத் சிங், சுஷ்மா சுவராஜ், அருண் ஜேட்லி ஆகியோருடன் சென்ற தனி விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவசரமாகத் தரையிறங்கியது.

அடுத்தமாதம் கர்நாடகத்தில் நடக்கவுள்ள சட்டமன்றத் தேர்தலையொட்டி முதல்கட்ட பிரச்சாரத்தை ஆரம்பிக்க இந்த மூவரும் தனி விமானத்தில் இன்று காலை பெங்களூர் புறப்பட்டனர்.

ஆனால், வழியிலேயே விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதையடுத்து இந்த விமானம் டெல்லிக்குத் திருப்பப்பட்டது.

அந்த விமானம் மிக அவசரமாக டெல்லி விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

இந்த மூவரும் இன்று பெங்களூரில் பொதுக் கூட்டத்தில் பேச இருந்தது குறிப்பிடத்தக்கது.

English summary
A chartered plane that took off from Delhi this morning had an all-VIP passenger list: BJP president Rajnath Singh and senior party leaders Sushma Swaraj and Arun Jaitley. The plane was headed to Bangalore but was forced to turn around and return to Delhi for an emergency landing. The group was meant to address a rally Karnataka today ahead of next month's elections, when the BJP hopes to be re-elected in spite of a term that has been marked with corruption scandals and dissidence within the party.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X