For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அந்த 6 பந்துகள்.. பெங்களூரை சுளுக்கெடுத்த சன்!

ஹைதராபாத்: 6வது ஐபிஎல் தொடரில் இதுவரை இல்லாத அளவுக்கு முதல் முறையாக சூப்பர் ஓவர் மூலம் ஒரு போட்டியின் முடிவு தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. அதுதான் சன் ரைசர்ஸ் ஹைதராபாத்துக்கும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கும் இடையே நடந்த போட்டியாகும்.

கடைசி வரை விறுவிறுப்பு..யார் ஜெயிப்பார் என்ற பெரும் எதிர்பார்ப்பு.. திரில்லும் திகிலுமாக ஓடிய நிமிடங்கள்.. கடைசியில் சூப்பர் ஓவரைக் கையில் எடுக்கும் நிலைக்குப் போய் விட்டார்கள்.

சூப்பர் ஓவரில் டேல் ஸ்டெயின் புயல் வேகத்தில் பந்தை வீச, ஹைதராபாத் வெற்றியை நோக்கி வேகமாக ஓடியது.

எடுத்தது 130தான்.. இருந்தாலும் விட மாட்டோம்ல

எடுத்தது 130தான்.. இருந்தாலும் விட மாட்டோம்ல

முதலில் ஆடிய பெங்களூர் அணி 130 ரன்களை மட்டுமே எடுத்தது. ஆனால் அதை ஹைதராபாத் அணி எடுத்து விடாத வகையில் பந்து வீச்சில் பிரமாதப்படுத்தி விட்டது.

வினய் குமாரை சோதித்த ஒயிட்

வினய் குமாரை சோதித்த ஒயிட்

சூப்பர் ஓவரின்போது பெங்களூர் பந்து வீச்சாளர் வினய் குமாரை ரொம்பவே சோதித்து விட்டார் ஹைதராபாத் வீரர் கேமரூன் ஒயிட். அடுத்தடுத்து 2 சிக்ஸர்களை அவர் விளாச 6 பந்துகளில் விக்கெட் இழப்பின்றி 20 ரன்களைக் குவித்தது ஹைதராபாத்.

அந்த 6 பந்துகளில் வந்த ரன்கள்...

அந்த 6 பந்துகளில் வந்த ரன்கள்...

சன் ரைசர்ஸ் - 2 (1+ நோ பால்), 1, 1, 6, 2, 6, 2 (20/0). ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - 2, 1, 4, 1, 6, 1 (15/0)

சன் ரைசர்ஸுக்கு சூப்பர் ஓவர் போட்டவர் ஸ்டெயின்

சன் ரைசர்ஸுக்கு சூப்பர் ஓவர் போட்டவர் ஸ்டெயின்

சன் ரைசர்ஸ் அணியின் சார்பில் சூப்பர் ஓவரில் பந்து வீசியவர் டேல் ஸ்டெயின் ஆவார்.

சொதப்பிய கெய்ல்

சொதப்பிய கெய்ல்

வழக்கமாக வெளுத்து வாங்கும் கெய்ல் நேற்று சொதப்பி விட்டார். சூப்பர் ஓவரின் 5வது பந்தில் அவர் சிக்ஸர் அடித்தார். கடைசிப் பந்தில் பெங்களூருக்கு 7 ரன்கள் தேவைப்பட்டன. ஆனால் ஒரே ஒரு ரன் மட்டுமே கெய்லால் எடுக்க முடிந்தது.

சன்னுக்கு 2வது வெற்றி

சன்னுக்கு 2வது வெற்றி

சன் ரைசர்ஸ் அணிக்கு இது இந்தத் தொடரில் 2வது தொடர்ச்சியான வெற்றியாகும். முதலில் அவர்கள் புனே வாரியர்ஸை வீழ்த்தியிருந்தனர்.

பெங்களூருக்கு டாப் கோஹ்லி

பெங்களூருக்கு டாப் கோஹ்லி

பெங்களூர் அணிக்காக அதிக ரன்களை எடுத்தவர் விராத்கோஹ்லிதான். அவர் எடுத்த ரன்கள் 46 ஆகும்.

ஹென்ட்ரிக்ஸ் அசத்தல்

ஹென்ட்ரிக்ஸ் அசத்தல்

ஆஸ்திரேலிய ஆல் ரவுண்டர் மோசஸ் ஹென்ட்ரிக்ஸுக்கு இதுதான் முதல் ஐபிஎல் போட்டியாகும். இவர் 44 ரன்களையும், பின்னர் 2 விக்கெட்களையும் வீழ்த்தினார்.

Story first published: Monday, April 8, 2013, 11:05 [IST]
Other articles published on Apr 8, 2013
English summary
Yet another thriller was played out in IPL 2013 and Sunrisers Hyderabad won in Super Over against Royal Challengers Bangalore on Sunday night. Sunrisers and RCB fought it out in a low scoring contest till the last ball of the Super Over. Here are the highlights of this humdinger.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X