For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெரு நாட்டில் எண்ணெய் நிறுவன ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி விபத்து: 13 பேர் பலி

By Siva
Google Oneindia Tamil News

Peru
லிமா: தென் அமெரிக்க நாடான பெரு நாட்டின் வடக்கு பகுதியில் பிரெஞ்சு எண்ணெய் நிறுவனமான பெரன்கோவுக்கு சொந்தமான ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 13 பேர் பலியாகினர்.

பெரு நாட்டில் குராரே என்ற இடத்தில் பிரான்ஸ் எண்ணெய் நிறுவனமான பெரன்கோவுக்கு சொந்தமான எண்ணெய் வயல் உள்ளது. அங்கு செல்வதற்காக 9 பயணிகள் மற்றும் 4 சிப்பந்திகளுடன் ஹெலிகாப்டர் ஒன்று காடுகள் நிறைந்த நகரமான இக்விடோஸில் இருந்து கிளம்பியது. இந்த விமானம் ஈக்விடார் எல்லையில் மக்கள் தொகை குறைவாக உள்ள லொரேட்டோவில் சென்று கொண்டிருக்கையில் என்ஜினில் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து விமானம் தரையில் விழுந்தது.

இந்த விபத்தில் விமானத்தில் இருந்த பெரன்கோ ஊழியர் ஒருவர், 3 கான்டிராக்டர்களின் பிரதிநிதிகள் உள்பட பெருவைச் சேர்ந்த 13 பேர் பலியாகினர். இது குறித்து அறிந்த பெரு ராணுவம் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் உதவியாக உள்ளது என்று பெரன்கோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

எண்ணெய் நிறுவனங்களுக்கு சொந்தமான ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாவது இந்த ஆண்டில் இது இரண்டாவது முறை ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
A helicopter belonged to French oil company Perenco crashed in northern Peru killing all the 13 on board.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X