For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

'முருகன்' அடிச்சு ஆடியும் கொல்கத்தாவால் கரையேற முடியவில்லையே...!

ஜெய்ப்பூர்: இயான் மோர்கன் அருமையாக ஆடியும், ராஜஸ்தான் ராயல்ஸின் சிறப்பான பந்து வீச்சு மற்றும் பீல்டிங் காரணமாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கடைசி நேரத்தில் தோல்வியைத் தழுவ நேரிட்டு விட்டது.

ஜெய்ப்பூரில் நேற்று ஐபிஎல்லின் இன்னும் ஒரு சுவாரஸ்யமான போட்டி நடந்தது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸும், கொல்கத்தா நைட் ரைடர்ஸும் மோதின. மிகவும் விறுவிறுப்பாக நடந்த இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங்கில் பட்டையைக் கிளப்பியது ராஜஸ்தான் ராயல்ஸ்.

பின்னர் பவுலிங்கிலும் பின்னி எடுக்கவே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டு திரும்ப நேரிட்டது.

இந்தப் போட்டியின் சில சுவாரஸ்ய நிமிடங்கள்...

ரகளையாக ஆடிய ரஹானே

ரகளையாக ஆடிய ரஹானே

முதலில் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் அஜிங்கியா ரஹானே ஆரம்பத்தில் வான வேடிக்கை நிகழ்த்தினார். வந்த பந்துகளையெல்லாம் அவர் வெளுத்துக் கட்ட கொல்கத்தா சற்றே டென்ஷன் ஆனது.

போட்டுத் தாக்கிய ஹாட்ஜ்

போட்டுத் தாக்கிய ஹாட்ஜ்

அதன் பிறகு பிராட் ஹாட்ஜ் பிரமாதப்படுத்தினார். கடைசி வரை ஆட்டமே இழக்காமல் ஆடிய இவரால்தான் ராஜஸ்தான் அணியின் ஸ்கோர் வெகுவாக உயர்ந்தது.

6 போய் 144

6 போய் 144

இவர்கள் இருவரின் சிறப்பான ஆட்டம் காரணமாக 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 144 ரன்களை குவித்தது ராஜஸ்தான்.

ஆளுக்கு ஒன்று.. சுனிலுக்கு மட்டும் 2

ஆளுக்கு ஒன்று.. சுனிலுக்கு மட்டும் 2

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில், பிரெட் லீ, பாட்டியா, எல்.ஆர்.சுக்லா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். சுழற்பந்து சூறாவளி சுனில் நரேனுக்கு 2 விக்கெட்கள் கிடைத்தன.

முடிந்த வரை விளையாடிய கம்பீர்

முடிந்த வரை விளையாடிய கம்பீர்

கொல்கத்தாவின் வெற்றி வேட்டையை கேப்டன் கம்பீர் சிறப்பாகவே தொடங்கியதாக தெரிந்தது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர் 22 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

கடைசி வரை விரட்டி வந்த மோர்கன்

கடைசி வரை விரட்டி வந்த மோர்கன்

இருப்பினும் இயான் மோர்கன் ஆடிய ஆட்டத்தைப் பார்த்தபோது கம்பீர் விட்ட வேலையை மோர்கன் தன் தோளில் சுமந்தது போல தெரிந்தது. அதற்கேற்ப அவரும் சீராக விளையாடினார்.

19வது ஓவரில் விளையாடிய விதி

19வது ஓவரில் விளையாடிய விதி

19வது ஓவர் வரை கொல்கத்தா ரசிகர்களுக்கு நல்ல நம்பிக்கை இருந்தது. ஆனால் 19வது ஓவரில் மோர்கன் எதிர்பாராத வகையில் ஆட்டமிழக்கவே அதிர்ச்சியில் சமைந்து போய் விட்டது கொல்கத்தா.

19 ரன்களில் பறிபோன வெற்றி

19 ரன்களில் பறிபோன வெற்றி

19வது ஓவரில் 125 ரன்கள் எடுத்த நிலையில் அத்தனை விக்கெட்களையும் இழந்து தோல்வியைத் தழுவியது கொல்கத்தா. தோல்வி வித்தியாசம் 19 ரன்கள்தான்.

2வது ராயல் வெற்றி

2வது ராயல் வெற்றி

முதல் போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸை வீழ்த்தியிருந்தது ராஜஸ்தான். நேற்றைய வெற்றி அதற்கு 2வது வெற்றியாகும்.

ஒரு ஸ்பின்னர் கூட கிடையாது

ஒரு ஸ்பின்னர் கூட கிடையாது

ராஜஸ்தான் அணியில் நேற்று ஐந்து வேகப் பந்து வீச்சாளர்கள் இடம் பெற்றிருந்தனர். ஒரு ஸ்பின்னர் கூட கிடையாது.

பர்ஸ்ட் போட்டிகளில் எப்பவுமே வின்தான்

பர்ஸ்ட் போட்டிகளில் எப்பவுமே வின்தான்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஜெய்ப்பூரில் தான் ஆடிய அத்தனை முதல் போட்டிகளிலும் வெற்றி பெற்று புதிய சாதனையையும் படைத்துள்ளது.

ரொம்ப வேகம் டெய்ட்தான்...

ரொம்ப வேகம் டெய்ட்தான்...

இந்த தொடரிலேயே இதுவரை வீசப்பட்ட பந்துகளிலேயே மிகவும் வேகமான பந்து வீச்சு என்ற பெருமையை ஷான் டெய்ட் பெற்றுள்ளார். நேற்று அவர் கம்பீருக்கு மணிக்கு 150.19 கிலோமீட்டர் வேகத்திலான பந்தை வீசி கம்பீரை நிலை குலைய வைத்தார்.

கொல்கத்தாவை அடித்து சூப் வைத்த கூப்பர்

கொல்கத்தாவை அடித்து சூப் வைத்த கூப்பர்

ராஜஸ்தான் ராயல்ஸின் கெவின் கூப்பர் அபாரமாக பந்து வீசி 15 ரன்களை மட்டுமே கொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்தினார். அதேபோல திவாரிக்கும் 3 விக்கெட்கள் கிடைத்தன.

சிறந்த பேட்டிங்கைக் காட்டிய மோர்கன்

சிறந்த பேட்டிங்கைக் காட்டிய மோர்கன்

கொல்கத்தாவின் இயான் மோர்கன் 38 பந்துகளில் 51 ரன்களை விளாசினார். இதில் 3 சிக்ஸர்களும், 3 பவுண்டரிகளும் அடக்கம்.

19 ஓவர்களுக்கும் வேகம்தான்...

19 ஓவர்களுக்கும் வேகம்தான்...

நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பந்து வீச்சு வேகப் பந்து வீச்சாக மட்டுமே இருந்தது. அதாவது 19 ஓவர்களையும் வேகப் பந்து வீச்சாளர்களே போட்டனர்.

5 பேருக்கும் விக்கெட்

5 பேருக்கும் விக்கெட்

அதேபோல ராஜஸ்தான் அணியின் ஐந்து பந்து வீச்சாளர்களுக்கும் விக்கெட்கள் கிடைத்தன.

திவாரிக்கு 1000

திவாரிக்கு 1000

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் மனோஜ் திவாரி நேற்று ஐபிஎல் போட்டிகளில் 1000 ரன்களை எடுத்து முடித்தார்.

Story first published: Tuesday, April 9, 2013, 13:34 [IST]
Other articles published on Apr 9, 2013
English summary
The trend of low scores continued in IPL 2013 and in the latest contest, Rajasthan Royals upset defending champions Kolkata Knight Riders by 19 runs at the Sawai Mansingh Stadium on Monday night. After posting 144, Rajasthan successfully defended the score to come on top by 19 runs. KKR were bowled out for 125 in 19 overs. Eoin Morgan carried KKR's hopes with a fifty but his dismissal in the 19th over as the ninth batsman sealed their fate. Kevon Cooper was the bowling star for Rajasthan with 3/15 in 4 overs.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X