For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

குளு, குளுனு சூப்பரா இருக்காம் கொடைக்கானல்.. நீங்க எப்போ போறீங்க?

Google Oneindia Tamil News

கொடைக்கானல்: கொளுத்தும் வெயிலில் இருந்து தப்பிக்க , குளு, குளு சீசனில் விடுமுறையை அனுபவிக்க என கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

அக்னி நட்சத்திரம் ஆரம்பிக்க அவகாசம் இருந்தும், தனது கோர முகத்தை காட்ட ஆரம்பித்துவிட்டது சூரியன். நிழலின் அருமை வெயிலில் தானே தெரியும்.

எங்காவது குளு, குளு ட்ரிப் அடிக்கலாம் என நினைப்பவர்களின் முதல் சாய்ஸ் கொடைக்கானல் தான்.

சீசன் களை கட்டுது...

சீசன் களை கட்டுது...

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் குளு, குளு சீசன் நிலவி வருகிறது. இதையொட்டி தமிழ்நாடு முழுவதிலும் இருந்து சுற்றுலா பயணிகள் கொடைக்கானலில் குவிந்து வருகிறார்கள். நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் கொடைக்கானல் நகரம் சுற்றுலா பயணிகளின் வருகையால் திணறியது.

ஓவர் ட்ராபிக்...

ஓவர் ட்ராபிக்...

நகர் முழுவதும் சுற்றுலா பயணிகளின் வாகனங்களால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டதாம். இதனால் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு செல்வதில் மிகவும் தாமதம் ஆச்சாம்.

ஓடம் நதியினிலே...

ஓடம் நதியினிலே...

கொடைக்கானல் ஏரியில் படகு சவாரி செய்வதற்காக ஏராளமான பேர் நீண்ட கியூவில் காத்து நின்றனர். படகு சவாரி, சைக்கிள் சவாரி செய்வதில் குழந்தைகள் மட்டுமல்ல, பெரியவர்களும் அதிக ஆர்வம் காட்டினார்கள். இதனால் ஏரிச்சாலை மிகவும் பரபரப்பாக காணப்பட்டது.

பூப்பறிக்க...கூடாது!

பூப்பறிக்க...கூடாது!

பிரையண்ட் பூங்காவில் உள்ள வண்ண, வண்ண பூக்களை பார்ப்பதற்காக பெண்கள் அதிக ஆர்வம் காட்டினார்கள். சமர்த்தாக, பூங்காவில் உள்ள பூக்களுடன் நின்று குடும்பத்துடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டனர்.

அந்திமழை பொழிகிறது...

அந்திமழை பொழிகிறது...

கொடைக்கானலில் பகல் 1 மணி முதல் 2 மணி வரை சாரல் மழை பெய்ததால், சுற்றுலா பயணிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர். சாரல் மழையில் நனைந்தவாறு பசுமைப்பள்ளத்தாக்கு பகுதியை பார்வையிட்டனர்.

வெள்ளி மழை கொட்டுது...

வெள்ளி மழை கொட்டுது...

கோக்கர்ஸ்வாக், வெள்ளி நீர்வீழ்ச்சியையும் சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர். சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருந்ததால் தெருவோர கடை வியாபாரிகளும் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

ஸ்பெஷல் ரயில் ரெடி...

ஸ்பெஷல் ரயில் ரெடி...

கோடைக்கால கூடுதல் சிறப்பு ரெயில்கள் அட்டவணைகள் தயார் நிலையில் உள்ளதாகவும், விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகும் என்றும் தெற்கு ரெயில்வே பொது மேலாளர் ராகேஷ் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

அப்புறம் என்னங்க... ஜாலி ட்ரிப்புக்கு நீங்களும் ரெடி ஆகிட்டீங்களா?

English summary
Kodaikanal has a monsoon-influenced subtropical highland climate . The temperatures are cool throughout the year due to the high elevation of the city. Tourist stated their journey to Kodaikanal.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X