For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அமெரிக்காவிலும் அரசியல் வாரிசு... கிளிண்டன் மகள் அரசியலில் ஈடுபட முடிவு?

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Chelsea Clinton
வாஷிங்டன்: பில்கிளிண்டன் - ஹிலாரி கிளிண்டன் தம்பரியரின் மகள் செல்சியா கிளிண்டன் அரசியல் ஈடுபட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

34 வயதாகும் செல்சியாவுக்கு திருமணம் ஆகிவிட்டது. ஒரு தனியார் டி.வி. நிறுவனத்தில் நிருபராக பணியாற்றி வருகிறார். இவரிடம் பெற்றோரைப் போல அரசியலில் ஈடுபடுவீர்களா? என ஒரு தனியார் டி.வி. சார்பில் கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த செல்சியா, நான் எனது மனதில் ஒன்றை பற்றி நினைத்து இருக்கிறேன். அது அர்த்தமுள்ளதாக இருக்கும் என்றார். அவரது இந்த கருத்து அவர் அரசியலுக்கு வருவதையே காட்டுகிறது என கிளிண்டன்-ஹிலாரியின் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க அதிபராக 8 ஆண்டு காலம் பதவியில் இருந்தவர் பில் கிளிண்டன். இவரது மனைவி ஹிலாரியும், ஒபாமா அமைச்சரவையில் கடந்த 2009 முதல் 2012-ம் ஆண்டு வரை வெளியுறவு துறை அமைச்சராக இருந்தார்.

தற்போது பதவி விலகியுள்ள ஹிலாரி வரும் 2016-ம் ஆண்டு நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில் கிளிண்டன் மற்றும் ஹிலாரியை போன்று இவர்களது மகளும் அரசியலில் ஈடுபட முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இந்தியாவில் மட்டுமல்ல அமெரிக்காவிலும் அரசியல் வாரிசு தலையெடுக்கத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
Chelsea Clinton, daughter of President Bill Clinton, has left the door open to running for office one day, in an interview with NBC's show.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X