For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விபச்சாரப் பெண்களிடம் உல்லாசம் அனுபவித்து விட்டு கள்ள நோட்டைத் தரும் ஆண்கள்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

கொல்கத்தா: விபச்சாரப் பெண்களிடம் வரும் ஆண்கள், உல்லாசம் அனுபவித்து விட்டு போகும்போது கள்ளநோட்டுக்களைக் கொடுப்பதாக கொல்கத்தாவில் சர்ச்சை எழுந்துள்ளது.

கொல்கத்தாவின் மிகப் பெரிய விபச்சார மையமான சோனாகச்சி சிவப்பு விளக்குப் பகுதிக்கு நிறையப் பேர் வருவது வழக்கம். எப்போதும் ஆண்களின் கூட்டம் இங்கு நிரம்பி வழியும். இங்கு வரும் ஆண்களில் பலர் கள்ள நோட்டுக்களைக் கொடுப்பதாக தற்போது பிரச்சினை வெடித்துள்ளது. இதனால் பல பெண்கள் ஏமாந்து தவிக்கின்றனராம்.

இதையடுத்து வாடிக்கையாளர்கள் கொடுக்கும் பணம் நல்ல பணமா, கள்ள நோட்டா என்பதைக் கண்டறிய தர்பார் மஹிளா சமான்யா கமிட்டி என்ற என்ஜிஓ நிறுவனம், விபச்சாரப் பெண்களுக்குப் பயிற்சி அளித்து வருகிறது.

லைட்டிங்தான் காரணம்

லைட்டிங்தான் காரணம்

சோனாகச்சிதான் கொல்கத்தாவின் மிகப் பெரிய விபச்சார மையமாகும். மகாநதி படத்தில் கூட இதைக் காட்டியிருப்பார் கமல்.

விபச்சாரம் பிரகாசம்.. விளக்கொளியோ டல்

விபச்சாரம் பிரகாசம்.. விளக்கொளியோ டல்

இந்தப் பகுதியில் விபச்சாரம் கொடி கட்டிப் பறக்கிறது, படு பிரகாசமாக இருக்கிறது. அதேசமயம், இங்கு விளக்கொளி குறைவு. வெளிச்சமே இல்லாத இடங்களும் கூட இருக்கின்றன. தொழிலுக்கு அதுதான் சவுகரியம் என்பதால்.

கள்ள நோட்டு ராஜாக்கள்

கள்ள நோட்டு ராஜாக்கள்

இங்கு காத்திருக்கும் விபச்சாரப் பெண்களைத் தேடி வரும் ஆண்களில் பெரும்பாலானோர் மோசடிப் பேர்வழிகளாக உள்ளனர். அதாவது உல்லாசம் அனுபவித்து விட்டு போகும்போது கள்ள நோட்டுக்களைக் கொடுக்கிறார்களாம்.

பெரும் பாதிப்பு

பெரும் பாதிப்பு

இப்படி கள்ள நோட்டுக்களைக் கொடுப்பதால் இங்குள்ள விபச்சாரப் பெண்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தங்களது உடல் உழைப்பு இப்படி வீணாகிப் போய் விட்டதே என்று அவர்கள் வேதனையில் மூழ்கியுள்ளனர்.

நல்ல நோட்டைக் கண்டறிய பயிற்சி

நல்ல நோட்டைக் கண்டறிய பயிற்சி

இதையடுத்து தர்பார் மகளிர் தொண்டு நிறுவனம் தற்போது விபச்சாரப் பெண்களுக்கு நல்ல, கள்ல நோட்டைக் கண்டுபிடிக்கும் பயிற்சியை அளித்து வருகிறது.

ரெகுலராக வருபவர்கள் நல்லவர்கள்

ரெகுலராக வருபவர்கள் நல்லவர்கள்

இதுகுறித்து விபச்சாரப் பெண் ஒருவர் கூறுகையில், ரெகுலராக வரும் வாடிக்கையாளர்கள் கள்ள நோட்டுக்களைத் தருவதில்லை. மாறாக முதல் முறையாக வருபவர்கள்தான் இப்படி மோசடி செய்கிறார்கள் என்றார்.

வங்கதேத்து கள்ள நோட்டு

வங்கதேத்து கள்ள நோட்டு

இந்த கள்ள நோட்டுக்கள் அனைத்துமே வங்கதேசத்திலிருந்து ஊடுறுவியவையாகும் என்று சொல்கிறார்கள். காரணம்,சட்டவிரோமாக கொல்கத்தாவில் தங்கியிருக்கும் வங்கதேசத்தவர்கள் மூலமே இது பரவுகிறதாம்.

10,000 பெண்கள்

10,000 பெண்கள்

சோனாகச்சியில் கிட்டத்தட்ட 10,000 பெண்கள் விபச்சாரத்தைத் தொழிலாக செய்து வருகின்றனர். இவர்களுக்காக இங்கு தனியாக உஷா என்ற வங்கியும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
Sex workers of Kolkata's largest red-light area are being given training by an NGO to identify fake currency notes to prevent them from being duped by some clients. The training programme conducted by Durbar Mahila Samanaya Committee, an NGO working for the sex workers, is the same as that given to visually challenged persons who learn to distinguish between genuine and counterfeit notes through touch and from hearing the faint rustle of the paper.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X