For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐபிஎல் 6: 6 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தி ராஜஸ்தான் அபார வெற்றி!

By Mathi

ஜெய்ப்பூர்: ஐபிஎல் 6வது தொடரில் நேற்று இரவு ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை ராஜஸ்தான் ராஜயல்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

ஜெய்ப்பூரில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் டிராவிட் பீல்டிங்கை தேர்வு செய்தார். இதைத் தொடர்ந்து கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் மந்தீப்சிங்- கில்கிறிஸ்ட் ஜோடி தொடக்க வீரர்களாக களம் இறங்கியது. தொடக்கத்திலேயே பஞ்சாப் அணிக்கு பயங்கர அதிர்ச்சி காத்திருந்தது.

கில்கிறிஸ்ட் 0 ரன்னிலும் மந்தீப்சிங் 2 ரன்னிலும் ஆட்டமிழந்தார். வோரா 3 ரன்னில் அவுட் ஆனார். பின்னர் இணைந்த டேவிட் ஹசி- குர்கீரத் சிங் ஜோடி சிரிது நேரம் விளையாடியது. சிங் 10 ரன்களில் வெளியேறினார். டேவிட் ஹசி மட்டுமே நிலைத்து ஆடினார்.அவர் 41ரன்கள் வரை எடுத்திருந்தார். அந்த அணி 18.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 124 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.

Rajasthan Royals
இதனால் 125 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி களமிறங்கியது. தொடக்க வீரரான வாட்சன் 32 ரன்களிலும் டிராவிட் 9 ரன்களிலும் அவுட் ஆயினர். ஆனால் ராஜஸ்தான் அணியின் விக்கெட்டுகள் சரிந்து கொண்டிருக்க வழக்கம் ரஹானே நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்துக் கொண்டிருந்தார். ரஹானேவுடன் சாம்சன் இணைந்து அந்த அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 19.2 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 126 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
Story first published: Monday, April 15, 2013, 20:01 [IST]
Other articles published on Apr 15, 2013
English summary
Rajasthan Royals ensured their brilliant home run was intact, as they laboured to a six-wicket win over Kings XI Punjab in a closely-fought IPL-6 game at the SMS Stadium here on Sunday evening.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X