For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நிலநடுக்கம் எதனால் ஏற்படுகிறது?: சொல்கிறார் பேராசிரியர் ந.க.மங்கள முருகேசன்

Google Oneindia Tamil News

Earth quake
சென்னை: நமது தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டது. உங்களில் சிலர் அதனை உணர்ந்திருப்பீர்கள். அந்த நிலநடுக்கம் எப்படி ஏற்படுகிறது என்பதைத் தெரிந்து கொள்வோம்.

லேசான அதிர்ச்சி முதல் கடும் நிலநடுக்கம் வரை சுமார் 10 லட்சம் நிலநடுக்கங்கள் ஆண்டுதோறும் உலகில் ஏற்படுகின்றன.

பசிபிக் பெருங்கடல் பகுதி, தென் அமெரிக்காவின் மேற்குக்கரைப்பகுதி, ஆசியாவின் கிழக்குக் கரைப்பகுதி, மய்யநிலக் கடல் பகுதி ஆகியன உலகில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் பகுதிகளாகும். ஜப்பானில் தான் மிக அதிக அளவில் நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன. ஆண்டின் ஒவ்வொரு நாளும் பூமி அதிர்வு ஏற்படுகிறது. இவற்றில் பெரும்பாலானவை மிக மிக லேசானவை. சேதம் ஏதும் ஏற்படுத்தாதவை.

பசிபிக் கடலில் உள்ள பல தீவுகள், இந்தோனேசியா, துருக்கி, கிரேக்கம், தென் அமெரிக்கச் சிலி ஆகியன நிலநடுக்கப் பகுதியில் அமைந்துள்ளன. 1883ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 26ம் தேதி இந்தோனேசியா அருகே உள்ள கரகடோவாத் தீவில் கராங் எனும் எரிமலை பயங்கரமாகக் கக்கியபோது நிலநடுக்கம் ஏற்பட்டு அத்தீவின் சில பகுதிகள் கடலில் மூழ்கின.

1923ம் ஆண்டில் ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சுமார் ஒரு லட்சத்து எண்பதாயிரம் பேர் உயிரிழந்தனர்.

1939ல் தென் அமெரிக்காவில் உள்ள சிலி நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 20,000 பேரும், அதே ஆண்டில் துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 30,000 பேரும் உயிரிழந்தனர்.

1993ம் ஆண்டு இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் ஏறத்தாழ 25,000 பேரும், 2001ம் ஆண்டு ஜனவரி 26ம் தேதி அன்று குஜராத் மாநிலத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 20,000 பேரும் உயிரிழந்தனர்.

இப்படி நிலநடுக்கம் ஏற்பட்டுப் பல உயிர்கள், உடமைகள் அழிவது ஏன்? பூமியில் மிக ஆழத்தில் ஏற்படும் மாற்றங்களின் வெளிவிளைவுகளே நிலநடுக்கம்.

பூமியின் மேலே தோடுபோல அமைந்துள்ள மேற்புறப் பகுதி பாறைகளைக் கொண்டுள்ளது. இதனைப் புறணி என்பர்.

இப்புறணி எல்லா இடங்களிலும் நிலையாக அமைந்து இருக்கவில்லை. அவ்வாறு உறுதியாக அமைந்திராத இடங்களில் உட்புறப் பாறைகள் விரிசல் விட்டுச் சரிகையில், உட்புறத்தில் அமைந்த பெரும்பாறைகள் வேறு பெரும்பாறைகளுடன் மிகுந்த ஆற்றலுடன் உராய்கின்றன. அதனால் ஏற்படும் அதிர்வுகள் பூமியின் மேற்பரப்பை அடைவதால் பூமி அதிர்ச்சியான நிலநடுக்கம் ஏற்படுகிறது.

பூமிக்குள்ளே ஏற்படக்கூடிய இம்மாறுதல்கள் எல்லாமே வெளிப்பகுதியில் விளைவினை உண்டாக்குவதில்லை.

பூமியின் மேற்புறப் பாறை அடுக்குகள் காப்பு உறை போல அமைந்துள்ளதால், சில இடங்களில் மட்டுமே பூமியின் உள்ளே ஏற்படும் மாறுதல்கள் வெளிப்பகுதியில் விளைவை ஏற்படுத்துகின்றன. எனவே தான் பூமியில் சில இடங்களில் மட்டும் அடிக்கடி பூமி அதிர்வு ஏற்படுகிறது. இவ்வாறு பேராசிரியர் ந.க.மங்கள முருகேசன் தெரிவித்துள்ளார்.

English summary
Prof. Mangala Murugesan gave a detailed explanation about earth quake and how and why is it happening.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X