For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எங்களிடம் 23 லட்சம் ராணுவ வீரர்கள்.. வெள்ளை அறிக்கை வெளியிட்டு மிரட்டும் சீனா

Google Oneindia Tamil News

China's military white paper plays down dispute with India
பெய்ஜிங்: சீன ராணுவத்தில் 23 லட்சம் துருப்புகள் இருப்பதாக தனது முதல் வெள்ளை அறிக்கையில் சீனா தெரிவித்துள்ளது.

உலகிலேயே மிக வலிமையான ராணுவங்களில் சீனாவும் ஒன்று. 'சீன மக்கள் விடுதலை ராணுவம்' என்று அழைக்கப்படும் இந்த ராணுவத்தின் தரைப்படை, விமானப்படை, கப்பற்படை பற்றிய வெள்ளை அறிக்கை முதன் முதலாக வெளியிடப்பட்டுள்ளது.

சீனாவில் 23 லட்சம் துருப்புகள் இருப்பதாக தெரிவித்துள்ளது. இதைத்தவிர கட்டளைப்பிரிவு, அணுகுண்டு மற்றும் கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கும் ஏவுகணை பிரிவுகளில் வேலை பார்ப்போர்களும் இருக்கிறார்கள்.

ராணுவச் செலவு...

சீனாவில் இந்த ஆண்டு ராணுவத்திற்காக 10,000 கோடி டாலருக்கு மேல் செலவிடப்படுவதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

நாங்க ரொம்ப அதிகமாக்கும்...

ராணுவத்திலும், விமானப் படையிலும் முறையே 23500 மற்றும் 398000 என மொத்தம் 8,50,000 அதிகாரிகளையும் சீனா கொண்டிருக்கிறதாம்.

எங்க ஏரியா உள்ள வராத...

சீனாவிற்கு, கிழக்கு சீனக்கடல் பகுதியில் ஜப்பானுடன் தீவுப்பிரச்சினையும், தைவான் ராணுவத்துடன் தனி நாடு பிரச்சினையும் இருந்து வருகிறது. இயற்கை வளங்கள் நிறைந்த தென் சீனக்கடல் பகுதியில் ஆதிக்கத்தை நிலைநாட்டுவது தொடர்பாக அமெரிக்கா மற்றும் சீனாவிடையே பிரச்சினையும் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

மிரட்டலா...?

சீனா வெளியிட்டுள்ள இந்த ராணுவ வெள்ளை அறிக்கை, ஒரு மிரட்டலின் அறிகுறியாக இருப்பதாக கூறப்படுகிறது.

English summary
China's military has issued a white paper blaming the US for causing tension in the Asia-Pacific region and naming Japan as a troublemaker
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X