For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நீங்க குண்டா... அப்போ இனி விமான கட்டணம் அதிகமா கட்டணுமாம்

Google Oneindia Tamil News

ஓஸ்லோ: குண்டான உடல் வாகு கொண்ட விமான பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று நார்வேயைச் சேர்ந்த இந்திய வம்சாவளி பொருளாதார நிபுணர் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.

உடல் பெருத்த பயணிகளால் ஏற்படும் பல்வேறு கூடுதல் சுமைகளைக் குறைக்கும் வகையில் இந்த யோசனையை அவர் கூறியுள்ளார்.

அதாவது கூடுதல் எரிபொருள், கூடுதல் கார்பன் டை ஆக்சைடு உமிழ்தல் மற்றும் பாதுகாப்பு குறைபாடு ஆகியவற்றை இதன் மூலம் சமாளிக்க முடியும் என்பது இவரின் வாதமாகும்.

பரத் பட்டா என்ற இந்த பொருளாதார நிபுணர் கூறியதிலிருந்து சில பகுதிகள்.

எடைக்கு எடை...

எடைக்கு எடை...

'pay as you weigh' என்ற புதிய கொள்கையை பட்டா வெளியிட்டுள்ளார். அதாவது நமது உடல் எடைக்கேற்ற கட்டணத்தை செலுத்துவது என்று இதன் பொருளாகும்.

எடைக்கேற்ற கட்டணத்தால் பல லாபங்கள்...

எடைக்கேற்ற கட்டணத்தால் பல லாபங்கள்...

உடல் எடைக்கேற்றபடி விமானக் கட்டணத்தை செலுத்துவதன் மூலம் விமான நிறுவனங்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் பல லாபங்கள் ஏற்படுவதாக இவர் கூறுகிறார்.

எரிபொருள் சுமை குறையும்...

எரிபொருள் சுமை குறையும்...

உடல் எடை அதிகம் கொண்டவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பதன் மூலம் எரிபொருளுக்காக செலவிடப்படும் தொகையை ஈடு கட்ட முடியும்.

கார்பன் டை ஆக்சைடு குறையும்...

கார்பன் டை ஆக்சைடு குறையும்...

உடல் எதை அதிகம் கொண்டவர்களிடமிருந்து கார்பன் டை ஆக்சைடு அதிக அளவில் வெளியேறும். எனவே குண்டானவர்களிடம் அதிக கட்டணத்தை வசூலிக்க வேண்டும்.

உடலைக் குறைக்க முயற்சிப்பார்கள்...

உடலைக் குறைக்க முயற்சிப்பார்கள்...

கூடுதல் கட்டணம் வசூலிப்பதால் உடல் எடை அதிகம் கொண்டவர்கள், உடல் எடையைக் குறைக்க முயற்சிப்பார்கள். எனவே இது இரட்டிப்பு பலனாகவும் அமையும்.

சீட் பிரச்சினை குறையும்...

சீட் பிரச்சினை குறையும்...

சிலர் அதீத உடல் எடை கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு விமான சீட் சரியாக பொருந்துவதில்லை. எனவே உடலை அடக்கி, ஒடுக்கி உட்கார வேண்டியதாகிறது. அப்படிச் செய்யும்போது சீட் சில நேரங்களில் கிழிந்து விடுகிறது அல்லது பழுதாகிறது. இந்தப் பிரச்சினையயும் கூடுல் கட்டணம் வசூலிப்பதன் மூலம் சமாளிக்க முடியும்.

2 சீட் வாங்கியும் கஷ்டப்பட்ட கெவின் ஸ்மித்...

2 சீட் வாங்கியும் கஷ்டப்பட்ட கெவின் ஸ்மித்...

கெவின் ஸ்மித் என்ற அமெரிக்க சினிமா இயக்குநர் பருத்த உடல்வாகு கொண்டவர். இவருக்கு ஒரு சீட் போதாது. எனவே இவர் எப்போதுமே 2 சீட் வாங்கிக் கொண்டு தாராளமாக அமர்ந்து பயணிப்பார். அபப்டியும் கூட சில மாதங்களுக்கு முன்பு ஓக்லாந்திலிருந்து பர்பாங்க்குக்கு விமானத்தில் அவர் பயணித்த போது சீட் பிரச்சினை காரணமாக அவர் விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்.

30 சதவீதம் குண்டர்கள்தான்...

30 சதவீதம் குண்டர்கள்தான்...

அமெரிக்காவில் 30 சதவீதம் பேர் உடல் பருமன் உடையவர்கள் என்று கணக்கிடப்பட்டுள்ளது. எனவே இப்படிப்பட்டவர்களால் விமான நிறுவனங்கள் பல சிரமங்களை ஏற்கனவே சந்தித்து வருகின்றன.

கிலோவுக்கேற்ப கட்டணம்...

கிலோவுக்கேற்ப கட்டணம்...

சமோவா விமான நிறுவனம் ஒன்று ஏற்கனவே பயணிகளின் எடைக்கேற்ப கட்டணத்தை வசூலித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது குறிப்பிட்ட கிலோவுக்கு மேல் பயணிகளின் உடல் எடை கூடினால் அதற்கு தனி கட்டணம் வசூலிக்கப்படுகிறதாம்.

கொடுக்கலாம் தப்பில்லை...

கொடுக்கலாம் தப்பில்லை...

இதற்கிடையே, உடல் எடை அதிகம் கொண்டவர்கள் கூடுதல் விமானக் கட்டணம் தரலாம் என்று ஒரு கருத்துக் கணிப்பில் 60 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனராம்.

English summary
While a Norwegian economist believes airlines charging obese passengers extra could reduce fuel costs and CO2 emissions, others believe this is fat-shaming. Imagine if you had to stand on a weighing machine at the airport check-in counter and hand over money for being heavier than a certain limit. You do that for your luggage already, right? But now a Norwegian economist has suggested that, in order to handle the problems of obese passengers and increasing air fares due to fuel costs, customers should be charged according to their weight.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X