For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஊழியர்களுக்கு 5-10% ஊதிய உயர்வு அளிக்கும் டிசிஎஸ்: 45,000 பேருக்கு புதிதாக வேலை

By Siva
Google Oneindia Tamil News

 TCS to hike wage by 5-10%, hire 45,000 this year
மும்பை: சாப்ட்வேர் நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்(டிசிஎஸ்) இந்தியாவில் பணிபுரியும் தனது ஊழியர்களுக்கு இந்த ஆண்டு 7 சதவீதம் ஊதிய உயர்வு அளிக்கிறது. மேலும் இந்த ஆண்டு 45,000 பேரை பணியமர்த்துகிறது.

சாப்ட்வேர் நிறுவனமான டிசிஎஸ் ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலான காலாண்டில் ரூ. 3,596.9 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளாதக நேற்று அறிவித்தது. இந்நிலையில் அந்நிறுவனம் தனது ஊழியர்களுக்கு வழங்கவிருக்கும் ஊதிய உயர்வு குறித்தும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இது குறித்து ஈவிபி மற்றும் குளோபல் ஹெச்ஆர் தலைவர் அஜோய் முகர்ஜி கூறுகையில்,

இந்த காலாண்டில் நாங்கள் ஊழியர்களுக்கு 100 சதவீத வேரியபிள் பே அளிக்கவிருக்கிறோம். இந்த ஆண்டு இந்தியாவில் பணிபுரிபவர்களுக்கு 7 சதவீத ஊதிய உயர்வு அளிக்கப்படும். ஊழியர்களின் செயல்பாடுகளை பொறுத்து அவர்கள் 5 முதல் 10 சதவீதம் வரை ஊதிய உயர்வை எதிர்பார்க்கலாம். வளர்ந்து வரும் நாடுகளில் உள்ள எங்கள் நிறுவன ஊழியர்களுக்கு 4 முதல் 6 சதவீதம் வரை ஊதிய உயர்வும், வளர்ந்த நாடுகளில் உள்ள ஊழியர்களுக்கு 2 முதல் 4 சதவீதம் வரை ஊதிய உயர்வு வழங்கப்படும். ஊதிய உயர்வு ஏப்ரல் மாதம் முதல் வழங்கத் துவங்குவோம். கடந்த காலாண்டில் நாங்கள் 25,000 டிரெய்னீக்களுக்கு பணிக்கான கடிதம் அளித்தோம் என்றார்.

இந்த ஆண்டு டிசிஎஸ் 45,000 பேரை பணியமர்த்தவிருக்கிறது. அதில் ஏற்கனவே கல்லூரிகளக்கு சென்று இறுதியாண்டு மாணவர்கள் 25,000 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

English summary
Software major Tata Consultancy Services(TCS) announced that it will give its employees in India a pay hike of seven percent this year. It is hiring 45,000 persons this year.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X